ஹோம் /தேனி /

சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு.. சுற்றுலா பயணிகள் குளிக்க தடை..

சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு.. சுற்றுலா பயணிகள் குளிக்க தடை..

சுருளி

சுருளி அருவி

Suruli Falls : மேற்குத்தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர் மழை காரணமாக கம்பம் அருகேயுள்ள சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை..

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்துள்ளனர் வனத்துறையினர். 

வெள்ளப்பெருக்கு :-

தமிழகத்தில்  நிலவும் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக, மதுரை, கோயம்புத்தூர், தேனி உள்ளிட்ட மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

சுருளி அருவி

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மற்றும் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியிலும் கன மழை பெய்து வருகிறது. சுருளி வனப்பகுதியில் உள்ள தூவானம் அணை பகுதி, அரிசிப்பாறை, ஈத்தைப்பாறை மற்றும் காட்டு நீருற்று ஓடை பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது.

அருவியில் குளிக்க தடை:

இதன் காரணமாக, சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. மேலும், கன மழை தொடர்ந்து பெய்து கொண்டிருப்பதால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் காரணமாக சுருளி அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

பொதுமக்கள் யாரும் அருவி பகுதிக்கு செல்லாதவாறு வனத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருவதாக கம்பம் கிழக்கு வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Published by:Arun
First published:

Tags: Cumbum, Local News, Theni