ஹோம் /தேனி /

வீணாகும் பேப்பரில் இருந்து தினசரி வருமானம்.. தேனி இளைஞரின் அசத்தல் காகித பை தயாரிப்பு பிசினஸ்...

வீணாகும் பேப்பரில் இருந்து தினசரி வருமானம்.. தேனி இளைஞரின் அசத்தல் காகித பை தயாரிப்பு பிசினஸ்...

தேனி

தேனி இளைஞரின் அசத்தல் காகித பை தயாரிப்பு பிசினஸ்...

Paper Bag Business | தேனி மாவட்டம் கூடலூர் பகுதியை சேர்ந்த  இளைஞர் பயன்படுத்தப்பட்ட பழைய செய்தித்தாள்களை பயன்படுத்தி காகித பைகள் தயாரித்து அதன் மூலம் அசத்தல் தினசரி வருமானம் பெற்று வருகிறார். அவரின் பிசினஸ் என்ன? அதில் கிடைக்கும் வருவாய் என்ன? வாங்க விரிவாக பார்க்கலாம்..

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Theni Allinagaram | Theni

தேனி மாவட்டம் கூடலூர் பகுதியை சேர்ந்தவர் 26 வயதாகும் பால வெங்கடேஷ், இவர் பயன்படுத்தப்பட்ட பழைய செய்தித்தாள்களை காகித பைகளாக மாற்றி அதனை கடைகளில் விற்பனை செய்து தினசரி வருமானம் பார்த்து வருகிறார். 

எம்பிஏ பட்டப்படிப்பை முடித்துள்ள பால வெங்கடேஷ் , தற்போது தனியார் மருந்து கடையில் வேலை பார்த்து வருகிறார். இவர் கல்லூரியில் படிக்கும் போதிலிருந்தே அதிகாலை நேரத்தில் வீடு வீடாக சென்று செய்தித்தாளை விநியோகம் செய்யும் பணியில் சேர்ந்து தன்னுடைய 19 வயது முதல் தொடர்ச்சியாக 5 ஆண்டுகளாக பகுதி நேர வேலையாக கல்லூரி படிப்பை மேற்கொண்டவாரே செய்தித்தாள் விநியோகம் செய்யும் பணியில் பணியாற்றி வந்துள்ளார்.

செய்தித்தாள் விநியோகிக்கும் பணியில் இருந்த பொழுது , பயன்படுத்தப்பட்ட செய்தித்தாள்களை உபயோகமான பொருட்களாக மாற்ற பழைய செய்தித்தாள்களை காகித பைகளாக மாற்றி அதனை வியாபாரமாக செய்யலாம் என்று யோசனை இவருக்கு தோன்றியுள்ளது.

மேலும் படிக்க:  தேனி மாவட்டத்தை சேர்ந்த பிரபல சினிமா இயக்குனர்கள் யாரெல்லாம் தெரியுமா? 

அதன்படி தனது பெற்றோர்களுடன் சேர்ந்து செய்தித்தாள்களை குறிப்பிட்ட விலைக்கு வெளியில் இருந்து வாங்கி அதனை வெவ்வேறு அளவுகளில் காகித பை ஆக தயாரித்து தேனி மாவட்டம் முழுவதும் உள்ள வணிக கடைகளுக்கு சென்று விநியோகித்து வருகிறார் .

பகல் நேரங்களில்  இதர வேலைகளை முடித்துக் கொண்டு தினசரி மாலை வேலைகளில் காகிதப்பையை தயாரிக்கும் வேலையினை பால வெங்கடேஷ் மற்றும் அவரது குடும்பத்தார் செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க: ‘பொன்னி நதி பாக்கணுமே’ - தஞ்சை கல்லணையும் அங்கே அழகாய் பொங்கிவரும் காவிரியின் சிறப்பும்!

காகித பைகளின் விலை:

முழுமையாக தயாரிக்கப்பட்ட காகிதப்பைகள் ஒரு கிலோ 70 ரூபாய்க்கு கடைகளுக்கு விநியோகிப்பதாகவும் , ஒரு கிலோவிற்கு நூறு காகித பைகள் வரை இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். தமிழக அரசு பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிப்பதற்கு பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் நிலையில் வணிக நிறுவனங்களுக்கு பிளாஸ்டிக் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால் வணிக வளாக உரிமையாளர்கள் பேப்பரால் ஆன காகித பைகளை வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பால வெங்கடேஷ் கூறுகையில் , " நான் தினசரி செய்தித்தாள் விநியோகிக்கும் பணியில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது பழைய பேப்பர்களை வாங்கி அதனை காகித பைகளாக மாற்றி விற்பனை செய்யலாம் என்ற யோசனை எனக்கு தோன்றியது. இந்த காகித பைகள் மூலம் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க முடியும் என்பதன் அடிப்படையில் இதனை சிறு தொழிலாக செய்ய ஆரம்பித்தேன்.

மேலும் படிக்க: பொன்னியின் செல்வன் போற்றும் பழையாறை - சிறப்புகள் என்னென்ன தெரியுமா?

கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பேப்பர் பையை தயாரிக்கும் தொழிலை நானும் எனது குடும்பத்தாரும் சேர்ந்து செய்து வருகிறோம். சிறிய அளவிலான மாத்திரைகள் போடும் அளவிலான காகித பை முதல் பழங்கள், துணிகள் வைக்கும் பெரிய அளவிலான காகித பைகள் தயாரிக்கின்றோம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

சிறிய காகித பைகள் தயாரிக்கும் போது நாள் ஒன்றுக்கு ஐந்து கிலோ வரையும் பெரிய பைகள் தயாரிக்கும் போது நாள் ஒன்றுக்கு இரண்டு முதல் மூன்று கிலோ வரையும் தயாரிக்கின்றோம்.

மேலும் படிக்க:  சொந்த வீடு வாங்கவும், சொத்து பிரச்சினை நீங்கவும் திருச்சியில் வழிபட வேண்டிய கோவில்!

தினசரி மாலை வேளையில் நானே மாவட்டம் முழுவதும் உள்ள கடைகளுக்கு சென்று காகித பைகளை விநியோகித்து வருகிறேன். கடை உரிமையாளர்கள் தொடர்பு கொண்டு காகித பைகளை கேட்டு வாங்குகின்றனர். பொதுமக்களும் காகித பைகளை தைக்கமின்றி கையில் எடுத்துச் செல்வதால் வணிக உரிமையாளர்கள் காகித பைகளை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தினசரி வருவாயாக 300 முதல் 500 வரை இந்த காகிதப்பை தயாரிப்பது கிடைக்கிறது. சிறு தொழிலாக செய்வதால் இந்த வருமானம் தினசரி பயன்பாட்டுக்கு பெரிதும் உதவுகிறது" என்றார்

Published by:Arun
First published:

Tags: Business, Local News, Theni