முகப்பு /தேனி /

கூடலூரில் நெடுஞ்சாலை பணிகளுக்காக வெட்டப்பட்ட பழமையான 229 மரங்கள்- பொதுமக்கள் வேதனை

கூடலூரில் நெடுஞ்சாலை பணிகளுக்காக வெட்டப்பட்ட பழமையான 229 மரங்கள்- பொதுமக்கள் வேதனை

X
வெட்டப்பட்ட

வெட்டப்பட்ட பழமையான மரம்

Theni | தேனி மாவட்டம் கூடலூரில் நான்கு வழி சாலை பணிகளுக்காக பல ஆண்டுகள் பழமை வாய்ந்த 229 மரங்கள் வெட்டப்பட்டுள்ளன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் கூடலூரில் நடைபெற்று வரும் நான்கு வழி சாலை பணிகளுக்காக கூடலூரில் அடையாளமாக இருந்த பல ஆண்டுகள் பழமை வாய்ந்த 229 மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. கூடலூரில் இயற்கை வளத்தைப் பாதுகாக்க பொதுமக்கள் முன்வந்து மரங்கள் நட வேண்டும் என தன்னார்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

நான்கு வழிச்சாலை

தேனி மாவட்டம் கூடலூர் நகர்ப்பகுதி வழியாக கேரள மாநிலத்திற்கு செல்லும் மாநில நெடுஞ்சாலை அமைந்துள்ளது. கூடலூர் நகர் பகுதியின் வடக்கு காவல் நிலையம் முதல் மந்தை கால்வாய் வரை உள்ள நான்கு கிலோமீட்டர் தூரம் சாலை மாநில நெடுஞ்சாலை துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்த மாநில நெடுஞ்சாலையை அகலப்படுத்தி நான்கு வழிச்சாலை அமைக்கும் பணியை கடந்த பல மாதங்களாக நெடுஞ்சாலை துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்காக நெடுஞ்சாலை துறையினர் சாலை ஓரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவாக்கும் பணிகளை மேற்கொண்டனர். சாலை ஓரங்களில் உள்ள மின்கம்பங்களை மாற்றி அமைப்பதற்கும், மரங்களை அகற்றுவதற்கும் அனுமதி கிடைக்காமல் இருந்து வந்ததால் நெடுஞ்சாலைப் பணிகள் பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டது.

வெட்டப்பட்ட மரம்

தற்போது நெடுஞ்சாலை பணிகளுக்காக மின்கம்பங்களை மாற்றி அமைக்கவும் மரங்களை அகற்றவும் நெடுஞ்சாலைத்துறைக்கு அனுமதி கிடைத்துள்ளது. அதன்படி தற்போது நெடுஞ்சாலை பணிகளுக்காக மின்கம்பங்கள் மாற்றி அமைக்கும் பணிகளும், மரங்கள் அகற்றும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

நெடுஞ்சாலை பணிகளுக்காக சுமார் 229 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. கூடலூரின் அடையாளமாக இருந்த பல மரங்கள் இந்த நெடுஞ்சாலை பணிகளுக்காக வெட்டப்பட்டது கூடலூர் மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பல ஆண்டுகள் பழமை வாய்ந்த மரங்கள் அகற்றப்பட்டுள்ளதால் கூடலூரின் இயற்கை வளம் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக தன்னார்வலர்கள் முன் வந்து கூடலூர் பகுதி முழுவதும் மரங்களை நட்டு வருகின்றனர்.

நெடுஞ்சாலை பணிகளுக்காக அகற்றப்பட்ட மரங்களுக்கு பதிலாக மரங்கள் நடப்பட்டாலும், அதனை முழுமையாக பராமரிக்க தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பு வேண்டும் என கூடலூர் பகுதி தன்னார்வலர்கள் கூறி வருகின்றனர்.

80 லட்சம் கொடுத்தால் 1 கோடி கிடைக்கும் - ஹவாலா பணம் மாற்றுவதாக மோசடி செய்த கும்பல் கைது

மேலும் பொதுமக்கள் முன்வந்து கூடலூரில் இயற்கை வளத்தை பாதுகாக்க வீட்டிற்கு ஒரு மரமோ அல்லது தங்களால் முடிந்த அளவிற்கு மரங்களை செடிகளை நட்டு இயற்கை வளத்தை பாதுகாக்க வேண்டிய கோரிக்கையும் வைத்துள்ளனர்.

First published:

Tags: Local News, Theni