Home /theni /

கூடலூர் பகுதியில் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து முகாம்..

கூடலூர் பகுதியில் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து முகாம்..

Medical

Medical camp

Theni District: தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

    தமிழகத்தில் 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை நலமுடன் வளர்த்தெடுக்கும் நோக்கத்துடன் ஊட்டச்சத்து தேவைப்படும் குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து திட்டம் தொடங்கப்படும் என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்ட சபையில் விதி எண். 110-ன் கீழ் புதிய அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

    அந்த வகையில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளை கண்டறிய ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் பிறந்த குழந்தை முதல் 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் வரை உயரம், எடை கண்காணிக்கும் சிறப்பு முகாம் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

    இந்த முகமானது தேனி மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களாக பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுவரும் நிலையில் கம்பம் வட்டாரத்தில் இன்று மருத்துவர் முருகன் தலைமையில் கூடலூர் திருவள்ளுவர் பள்ளியில் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து குறைபாடு கண்டறியும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகளை கண்டறிந்து, அந்த குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவு முறைகள் குறித்து பெற்றோர்களுக்கு கவுன்சிலிங் மற்றும் குழந்தைகளுக்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டது. தேனி மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு ஒவ்வொரு பகுதிகளுக்குச் சென்று இந்த முகாம் ஜூன் 9ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த முகாமில் மருத்துவர் வின்சன், மருந்தாளுநர் ராஜேஷ் கண்ணன் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

    6 வயதுக்குட்பட்ட குழந்தைகள் :-

    இதுகுறித்து மருத்துவர் வின்சன் கூறுகையில், " இந்த திட்டத்தின் நோக்கம் தமிழகத்தில் 6 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளையும் ஆரோக்கியத்துடனும், நலமுடனும் வளர்க்க வேண்டும் என்பதே ஆகும். இந்த திட்டமானது 9 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. சிறப்பு மருத்துவ பரிசோதனைக்கு உட்படும் குழந்தைகளின் விவரங்கள் அதற்கென வடிவமைக்கப்பட்டு உள்ள செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு கண்காணிக்கப்படும். இந்த திட்டத்தில் மருத்துவ உதவி தேவைப்படுவோர் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் என தனியாக பிரிக்கப்பட்டு, அவர்களில் கடுமையான, மிதமான ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளை கண்டறிந்து, அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து, சிறப்பு ஊட்டச்சத்து வழங்கப்படுகிறது. மருத்துவ உதவி தேவையானவர்களுக்கு உரிய சிகிச்சையும் அளிக்கப்பட உள்ளது " என்று தெரிவித்தார்.

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Arun
    First published:

    Tags: Cumbum, Gudalur, Theni

    அடுத்த செய்தி