முகப்பு /தேனி /

மதுரை கூட்டு குடிநீர் திட்டத்தால் பாதிப்பு.. பொதுப்பணித்துறை அதிகாரிகளை முற்றுகையிட்ட கூடலூர் சலவை தொழிலாளர்கள்..

மதுரை கூட்டு குடிநீர் திட்டத்தால் பாதிப்பு.. பொதுப்பணித்துறை அதிகாரிகளை முற்றுகையிட்ட கூடலூர் சலவை தொழிலாளர்கள்..

X
பொதுப்பணித்துறை

பொதுப்பணித்துறை அதிகாரிகளை முற்றுகையிட்ட கூடலூர் சலவை தொழிலாளர்கள்

Theni News | தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள முல்லைப் பெரியாறு ஆற்றின் தலைமதகுப் பகுதியில் மதுரை கூட்டுக் குடிநீர் திட்ட பணிகளை ஆய்வு செய்ய வந்த பொதுப்பணித்துறை அதிகாரிகளை முற்றுகையிட்ட சலவைத் தொழிலாளர்கள்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள முல்லைப் பெரியாறு ஆற்றில் இருந்து மதுரைக்கு நேரடியாக குடிநீர் கொண்டு செல்லும் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு ரூபாய் 1450 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு குறுவனுக்கு பாலம் அருகே வண்ணான் துறை என்னுமிடத்தில் தடுப்பணை மற்றும் பம்பிங் ஸ்டேஷன் அமைப்பதற்கு கடந்த ஆண்டு மே மாதம் 19ம் தேதி பூமி பூஜை நடத்தப்பட்டது.

இந்நிலையில், அப்பகுதியில் பல ஆண்டுகளாக சலவை தொழிலாளர்கள் பயன்படுத்தி வந்த துணி துவைக்கும் படித்துறை மற்றும் கூடலூர் நகராட்சி மூலமாக துணிகளை காய போடுவதற்காக கட்டிக் கொடுக்கப்பட்ட கட்டிடங்கள் சேதம் அடையும் என்பதால் வேறு இடத்தில் இத்திட்டத்தினை செயல்படுத்துங்கள், இந்த இடத்தில் பூமி பூஜை நடத்தக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் இருந்தும் மாவட்ட ஆட்சியர் மற்றும் கோட்டாட்சியருக்கு மனு அளித்தும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வந்தனர்.

சலவை தொழிலாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து சலவைத் தொழிலாளர்கள் கூறிய 6 கோரிக்கைகளையும் ஏற்றுக் கொண்ட அதிகாரிகள் 3 மாத காலத்திற்குள் அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதி கூறினர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மதுரை கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் இடத்தினை பார்வையிட வந்த பொதுப்பணித்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் கடந்த 8 மாதங்களாக துணிகள் துவைக்கும் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதால் 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ வழியின்றி மிகவும் சிரமப்படுவதாகவும், படித்துறை கட்டித்தரவும், ராட்சத கீழ்நிலை தொட்டி கட்டுவதற்காக பாறைகளை வெடி வைத்து தகர்த்ததில் தாங்கள் துணிகளை பாதுகாக்க பயன்படுத்தி வந்த கட்டிடங்களின் மேற்கூறைகள் சேதமடைந்து உள்ளதை சரிசெய்து தரும்படி கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் இந்த பிரச்சனை குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.

First published:

Tags: Local News, Theni