ஹோம் /தேனி /

தேனி கூடலூர் துர்க்கை அம்மன் கோவில் சிலை பிரதிஷ்டை விழா- பொதுமக்கள் திரளாக பங்கேற்பு

தேனி கூடலூர் துர்க்கை அம்மன் கோவில் சிலை பிரதிஷ்டை விழா- பொதுமக்கள் திரளாக பங்கேற்பு

X
துர்க்கை

துர்க்கை அம்மன் திருக்கோயில்  

தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் அமைந்துள்ள துர்க்கை அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்று வரும் நிலையில் முதல் நாள் திருவிழாவில் சிலை பிரதிஷ்ட நிகழ்வு நடைபெற்றது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Theni Allinagaram, India

தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் அமைந்துள்ள துர்க்கை அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று வரும் நிலையில் முதல் நாள் திருவிழாவில் சிலை பிரதிஷ்ட நிகழ்வு நடைபெற்றது.

சிலை பிரதிஷ்டை

தேனி மாவட்டம் கம்பம் கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் கூடலூர் ஸ்ரீ துர்க்கை அம்மன் கோயில் சிலை பிரதிஷ்டை விழா நடைபெற்றது.

தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் குமுளி கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீ துர்க்கை அம்மன் திருக்கோயில். பல ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயிலுக்கு தினசரி நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் கோயில் நிர்வாகிகள் சார்பாக அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து துர்க்கை அம்மன் கோயிலில் கும்பாபிஷேக திருவிழா டிசம்பர் ஒன்றாம் தேதி தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. இதில் முதல் நாள் திருவிழாவான இன்று கோயிலில் துர்க்கை அம்மனுக்கு சிலை பிரதிஷ்டை பூஜைகள் செய்யப்பட்டது.

இன்று மாலை வேளையில் துர்க்கை அம்மனுக்கு பொதுமக்கள் முளைப்பாரி எடுத்து வந்து அம்மனுக்கு பிரதிஷ்டை செய்தனர். மேலும் துர்க்கை அம்மன் கோவிலில் விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, திக் பலிமுதற்கால யாகசாலை பூஜைகள் யாகசாலை பிரவேசம், வேதிகா அர்ச்சனை, தீபாராதனை சாற்று முறை உட்பட பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டது.

துர்க்கை அம்மனுக்கு பூஜைகள் செய்த பின்னர் சிலை பிரதிஷ்டை நிகழவும் நடைபெற்றது. துர்க்கை அம்மன் சிலை பிரதிஷ்டை நிகழ்வில் கூடலூர், கம்பம் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

First published:

Tags: Local News, Tamil News, Theni