Home /theni /

நாளை குரூப் 2 தேர்வு.. தேனி மாவட்டத்தில் 21,588 பேர் எழுதுகின்றனர் - முழு விவரம்

நாளை குரூப் 2 தேர்வு.. தேனி மாவட்டத்தில் 21,588 பேர் எழுதுகின்றனர் - முழு விவரம்

TNPSC EXAM

TNPSC EXAM

Theni District: தமிழக அரசு பணிகளில் காலியாக உள்ள 5,413 பணியிடங்களுக்கு குரூப்-4 தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.  இத்தேர்வில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 21,588 நபர்கள் தேர்வு எழுத உள்ளனர்.

    தமிழகத்தில் அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் குரூப்-2வில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-2, 2ஏ தேர்வு மே 21ம் தேதி (நாளை) நடைபெற உள்ளது.

    தமிழ்நாடு அரசுப் பணிகளில் குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ ஆகிய பணியிடங்களில் காலியாக உள்ள 5,413 இடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியாகியது. இதன் மூலம் இந்த தேர்வுக்கு 11 லட்சம் பேர் விண்ணப்பம் செய்தனர். கடந்தாண்டைவிட 60 சதவிகிதத்தினர் அதிகமாக விண்ணப்பம் செய்துள்ளதாக தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

    தமிழ்நாடு அரசுப் பணிகளில் குரூப் 2 நேர்காணல் பணியிடங்களில் 116 காலிப்பணியிடங்களையும், நேர்காணல் இல்லாத குருப் 2 ஏ பணியிடங்களில் 5,413 காலியிடங்களையும் நிரப்புவதற்கான அறிவிப்பை பிப்ரவரி 23-ந் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. இவர்களுக்கான போட்டித் தேர்வுகள் வரும் மே மாதம் 21ஆம் தேதி முதல்நிலைத் தேர்வு நடக்கிறது.

    தேனி தேர்வாளர்கள் :-

    அதன்படி தேனி மாவட்டத்தில் பெரியகுளம் தாலுகாவில்-3,799, உத்தமபாளையம் தாலுகாவில்-6,179, தேனி தாலுகாவில் 16,610 என 21,588 பேர் தேர்வு எழுத உள்ளனர்.

    இதற்காக தேனி தாலுகாவில்-43, பெரியகுளம் தாலுகாவில்-14, உத்தமபாளையம் தாலுகாவில்-25 என மொத்தம் 82 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    தேர்வை கண்காணிக்க தேனி தாலுகாவில் 9 இயக்க குழுக்கள், 6 பறக்கும் படை, பெரியகுளம் தாலுகாவில் 4 இயக்க குழுக்கள், 3 பறக்கும் படை, உத்தமபாளையம் தாலுகாவில் 6 இயக்க குழுக்கள், 4 பறக்கும் படைகள் என மொத்தம் 19 இயக்க குழுக்களும், 13 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

    தேர்வு மையங்களில் 82 வீடியோ கிராபர்கள் தேர்வை பதிவு செய்கின்றனர். தேர்வு பணியில் தேனி தாலுகாவில்-86, பெரியகுளம் தாலுகாவில்-28, உத்தமபாளையம் தாலுகாவில்-50 என 164 ஆய்வு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு வினாத்தாள்கள் பெரியகுளம், தேனி, உத்தமபாளையம் ஆகிய தாலுகாக்களில் உள்ள சார்கருவூலங்களுக்கு நேற்று பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

    அனைத்து தேர்வு மையங்களிலும் போலீஸ் எஸ்பி டோங்கரே பிரவீன் உமேஷ் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது. தேர்வு மையங்களுக்கு விண்ணப்பித்தவர்கள் செல்வதற்கு வசதியாக சிறப்பு பஸ்கள் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Arun
    First published:

    Tags: Group 2 exam, Theni, TNPSC

    அடுத்த செய்தி