முகப்பு /தேனி /

தேனியில் மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண உதவித்தொகை வழங்கிய ஆட்சியர்..

தேனியில் மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண உதவித்தொகை வழங்கிய ஆட்சியர்..

X
தேனி

தேனி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம்

Theni District News | தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 1.75 லட்சம் மதிப்புள்ளான திருமண உதவித் தொகையினை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 1லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ளான திருமண உதவித் தொகையினை தேனி மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

குறை தீர்க்கும் கூட்டம் :-

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறை தீர்க்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தேனி மாவட்ட ஆட்சியர் சஜீவனா, மாற்றுத்திறனாளிகளின் மனுக்களை பெற்றுக் கொண்டார்.

மேலும்,மேல சொக்கநாதபுரம் பகுதியினை சேர்ந்த ஈஸ்வரன், சின்னமனூர் பகுதியினை சேர்ந்த முத்துவேல், ஜீ.கல்லுப்பட்டியை சேர்ந்த அழகு லட்சுமி , தென்கரையினை சேர்ந்த அன்பரசன் ஆகிய மாற்றுத்திறனாளிகளுக்கு மொத்தம் 1,75000 மதிப்புள்ளான திருமண உதவித்தொகையினை தேனி மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தேனி, பெரியகுளம், போடிநாயக்கனூர், கம்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்களுக்கான கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இந்த நிகழ்ச்சியின் போது தேனி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்கள், துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்

    First published:

    Tags: Local News, Theni