முகப்பு /தேனி /

தேனி கௌமாரியம்மன் கோயிலில் வைகாசி திருவிழா..! முக்கிய வீதிகளில் உலா வந்த அம்மன்..!

தேனி கௌமாரியம்மன் கோயிலில் வைகாசி திருவிழா..! முக்கிய வீதிகளில் உலா வந்த அம்மன்..!

X
தேனி

தேனி கௌமாரியம்மன் கோயிலில் வைகாசி திருவிழா

Theni Gowmariamman Temple : தேனி கௌமாரியம்மன் கோயில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு வண்ண மலர் மாலைகளால் அலங்கரிக்கபட்ட உற்சவர் அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா புறப்பாடு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் தேனி நகரில் மிகவும் பழமை வாய்ந்த சந்தை மாரியம்மன் என அழைக்கப்படும் ஸ்ரீகௌமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் வைகாசி திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டிற்கான வைகாசி பெருந்திருவிழா கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி 22 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக உற்சவர் அம்மன் வீதி உலா புறப்பாடு தேனியில் நடைபெற்றது. முன்னதாக ஆலயத்தில் இருக்கும் மூலவர் அம்மனுக்கு வண்ண பட்டுடுத்தி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்த மூலவருக்கு தீபாராதனை காட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து தேனி அல்லிநகரம் பகுதியில் இருந்து உற்சவர் அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி வண்ண மலர் மாலைகளால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு தேனி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா புறப்பட்டு நடைபெற்றது.

தேனி கௌமாரியம்மன் கோயிலில் வைகாசி திருவிழா

வண்ண வான வேடிக்கைகளுடன் கரகம் முன்னே செல்ல, சிம்ம வாகனத்தில் உற்சவர் அம்மன் கௌமாரியம்மன் கோயிலுக்கு வருகை தந்தார் . பின்னர் ஆலயத்திற்கு வந்த உற்சவர் அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Religion18, Theni