முகப்பு /தேனி /

விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்காததால் தேனியில் அரசுப்பேருந்து ஜப்தி...

விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்காததால் தேனியில் அரசுப்பேருந்து ஜப்தி...

X
அரசு

அரசு பேருந்து ஜப்தி  

Theni District | நீதிமன்றம் உத்தரவிட்டும் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்கததால் அரசு பேருந்து ஜப்தி செய்து நடவடிக்கை

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டத்தில் சாலை விபத்தில் கால்களை இழந்த நபருக்கு இழப்பீடு வழங்காததால் தேனி புதிய பேருந்து நிலையத்தில் நீதிமன்ற உத்தரவின் பேரில் அரசு பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.

தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள லோயர் கேம்ப் பகுதியைச் சேர்ந்தவர் 52 வயதாகும் ஆறுமுகம் அப்பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் கடந்த 2016 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி ( 20.2.2016) அன்று பி.சி.பட்டி பகுதியில் இருந்து தேனியை நோக்கி அவரது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்பொழுது ஆறுமுகம் சென்ற இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது . இந்த விபத்தில், ஆறுமுகத்தின் இரண்டு கால்களும் செயலிழந்தது. இந்த நிலையில் விபத்து நடைபெற்றது தொடர்பாக தேனி நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இதில், கடந்த 2021 ஆம் ஆண்டு ( 30 .11.2021) அன்று ஆறுமுகத்திற்குரூ.39.05 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

நீதிமன்ற உத்தரவிட்டு சில ஆண்டுகள் கடந்த நிலையில் இன்னும் இழப்பீடு வழங்கப்படாமல் இருந்ததால், இருசக்கர வாகனம் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய பேருந்தை நீதிமன்ற ஊழியர்கள் தேனி பேருந்து நிலையத்தில் ஜப்தி செய்தனர்.

நீதிமன்றம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டும், இழப்பீடு வழங்காமல் இருந்து வந்ததையடுத்து,TN 57 N 2227 பதிவெண் கொண்ட அரசு பேருந்தை நீதிமன்ற ஊழியர்கள் தேனி புதிய பேருந்து நிலையத்தில் ஐப்தி செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

First published:

Tags: Local News, Theni