முகப்பு /தேனி /

போடியில் பிறந்த 2 குழந்தைகளுக்கு அடித்த அதிர்ஷ்டம்..! என்ன தெரியுமா?

போடியில் பிறந்த 2 குழந்தைகளுக்கு அடித்த அதிர்ஷ்டம்..! என்ன தெரியுமா?

X
மாதிரி

மாதிரி படம்

Theni News : தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அரசு மருத்துவமனையில் பிறந்த 2 குழந்தைகளுக்கு அடித்த அதிர்ஷ்டம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் போடி அரசு மருத்துவமனையில் மார்ச் 1ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளில் பிறந்த 2 குழந்தைகளுக்கு போடி நகர் செயலாளர் புருஷோத்தமன் தங்க மோதிரம் வழங்க ஏற்பாடு செய்திருந்தார். இந்நிலையில், போடிநாயக்கனூருக்கு வருகை தந்த தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் மார்ச் 9ம் தேதி பிறந்த 2 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்து 2 குழந்தைகளின் தாய்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் மற்றும் பழங்கள் வழங்கினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளன்று பிறந்த 2 குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக உள்ள நபர்களுக்கு பழங்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தேனி வடக்கு மாவட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

First published:

Tags: Local News, Theni