Home /theni /

PPMEGP திட்டத்தின் கீழ் மானியத்தில் கடனுதவி பெற்று தொழில் தொடங்கலாம் - முழு விவரம் இதோ!

PPMEGP திட்டத்தின் கீழ் மானியத்தில் கடனுதவி பெற்று தொழில் தொடங்கலாம் - முழு விவரம் இதோ!

Lone

Lone

Theni District: தேனி மாவட்ட கிராமப்புறம் மற்றும் நகர்ப்புற இளைஞர்கள் தொழில் முனைவோருக்கான பீரதம மந்திரியின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் மானிய கடனுதவி பெற்று தொழில் தொடங்குவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    தேனி மாவட்டத்தில், கிராம மற்றும் நகர்ப்புறங்களில் புதிய தொழில்களை உருவாக்குவதன் மூலம், சுயவேலைவாய்ப்பு, பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கத்தோடு, மத்திய அரசால் 'பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்\" (PPMEGP) அறிவிக்கப்பட்டு, மாவட்டத் தொழில் மையத்தால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி நிறுவனங்கள் துவங்க ரூபாய்
    25 லட்சமும், சேவை நிறுவனங்கள் துவங்க ரூ.10 லட்சமும் வங்கிக் கடன் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. திட்ட மதிப்பீட்டில் 25%மானியம் நகர்புறங்களுக்கும், 35%மானியம் ஊரக பகுதிகளில் தொழில் துவங்குவோருக்கும் அரசு மாவட்ட தொழில் மையம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தில் உற்பத்தி பிரிவின் கீழ் ரூ.10 லட்ச ரூபாய்க்கு மேற்பட்ட திட்டங்களுக்கும், சேவை பிரிவின் கீழ் ரூ.5.00 லட்சம் மேற்பட்ட திட்டங்களின் கீழ் பயன்பெற விரும்புவோர் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இத்திட்டத்திற்கு வயது வரம்பு கிடையாது.

    2021-22ஆம் நிதியாண்டில் இத்திட்டத்திற்கான இலக்கு 59 பயனாளிகளுக்கு 170 லட்சம் ரூபாய் மானியமாக ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. தற்போது 2022-23க்கான நடப்பு நிதியாண்டில் வேலைவாய்ப்பற்ற நபர்கள் அதிகமாக பயன்பெறும் வகையில் அரசால் இலக்குகுறியீடு 177 நபர்களுக்கு 510 லட்சம் ரூபாய் மானியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    தகுதியான நபர்கள், ஆயத்த ஆடைகள் தயாரிப்பு, உணவு எண்ணெய் தயாரித்தல், ப்ளோரிங் டைல்ஸ் மற்றும் ஹோலோப்ளாக். இலவம் பஞ்சுமெத்தை, தலையணை தயாரித்தல், கால்நடை தீவனம் தயாரிப்பு, ஆட்டோ மொபைல் சர்வீஸ் ஸ்டேசன், காயர் மற்றும் காயர் பித் ப்ளாக்ஸ், பேக்கரி மற்றும் உணவகம், அழகு நிலையம், பெட் பாட்டில்கள் தயாரிப்பு மசாலா பொருட்கள் தயாரிப்பு போன்ற உற்பத்தி மற்றும் சேவை. நிறுவனங்கள் தொடங்க முன்வரலாம்.

    இத்திட்டத்தின் கீழ் பயன்பெற ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் www.kviconline.gov.inஎன்ற இணையதளத்தில் Agency : DIC என குறிப்பிட்டு விண்ணப்பம் செய்து இத்திட்டத்தின் கீழ் மானியத்துடன் வங்கி கடனுதவி பெற்று தொழில் துவங்கலாம்.

    மேலும் விபரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம். 89255 33998 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயனடையுமாறு தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் முரளீதரன் தெரிவித்துள்ளார்.

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Arun
    First published:

    Tags: Theni

    அடுத்த செய்தி