முகப்பு /தேனி /

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்... தேனி மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்..

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்... தேனி மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்..

X
முதலமைச்சர்

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்

Chief Minister's Cup : இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை , தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடத்தப்படும் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் தேனி மாவட்டத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் தொடங்கியது.  

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்ட அளவில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடத்தப்படும் இந்த போட்டிகளில் குழு விளையாட்டு பிரிவில் கபடி, சிலம்பம், ஹாக்கி, இறகுப்பந்து, கூடைப்பந்து உள்ளிட்ட பல்வேறு போட்டிகளும், தடகளப் பிரிவில் ஈட்டி எறிதல், குண்டு எறிதல், ஓட்டப் பந்தயம் என மொத்தம் 50 வகையான விளையாட்டுகள் இடம்பெற்றுள்ளன. பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள், பொதுப் பிரிவினர், அரசு ஊழியர்கள் என அனைவருக்கும் வரும் 21ம் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெற உள்ளன.

இதில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களைப் பிடிப்பவர்களுக்கு பரிசுத்தொகையும் ,தேர்வு செய்யப்படும் வீரர் வீராங்கனைகள் அரசின் செலவில் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்க்ரே, பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார், அல்லிநகரம் நகரமன்ற தலைவர் ரேணுகா பாலமுருகன் ஆகியோர் இறகுப்பந்து விளையாடி விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்க்ரே, பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன் மற்றும் விளையாட்டு துறை அலுவலர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

First published:

Tags: Local News, Theni