தேனி மாவட்டம் கம்பம் நகரில் உள்ள சிக்னல் அருகே கோடை வெயிலினால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வரும் நிலையில் பொதுமக்கள் தங்களின் தாகத்தை தீர்த்துக் கொள்ள தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது . நிகழ்ச்சியின் திறப்பு விழாவில் பொதுமக்களுக்கு இலவசமாக திராட்சை தர்பூசணி வாழைப்பழம் உள்ளிட்ட பழவகைகள் வழங்கப்பட்டது
குடிநீர் பந்தல் :-
தேனி மாவட்டத்தில் கோடை வெப்பம் அதிகமாக இருக்கும் சூழலில் பொதுமக்கள் மதிய வேலைகளில் நடமாட முடியாத அளவிற்கு வெயிலின் தாக்கத்தால் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மதிய வேலைகளில் பொதுமக்கள் தங்களது தங்கத்தை தீர்த்துக் கொள்ள ஆண்டுதோறும் சாலை ஓரங்களில் குடிநீர் பந்தல் அமைக்கப்படும்.
அதேபோல இந்த ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவின் பெயரில் அனைத்து நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் இலவச தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டு வருகிறது .
அதனை தொடர்ந்து கம்பம் நகராட்சி சார்பில் கம்பம் நகர் பகுதி முழுவதும் நான்கு இடங்களில் இலவச குடிநீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இலவச குடிநீர் பந்தல் அமைக்கும் நிகழ்ச்சி கம்பம் சிக்னல் அருகில் கம்பம் நகராட்சி சார்பில் நகர் மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியின் துவக்க விழாவில் பொதுமக்களுக்கு இலவசமாக குளிர்பானங்கள், தண்ணீர் பழம் திராட்சை மா, கொய்யா , வாழைப்பழம் உள்ளிட்ட பழங்கள் இலவசமாக வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கம்பம் நகர மன்ற உறுப்பினர்கள் , நகராட்சி பொறியாளர் பன்னீர், உதவி பொறியாளர் சந்தோஷ் குமார் மற்றும் ஏராளமான பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Summer, Theni