முகப்பு /தேனி /

சாலையோர வியாபாரிகளுக்கு தீனதயாள் அந்தியோதயா யோஜனா திட்டத்தின் கீழ் இலவச தள்ளுவண்டிகள் வழங்கிய கூடலூர் நகராட்சி..

சாலையோர வியாபாரிகளுக்கு தீனதயாள் அந்தியோதயா யோஜனா திட்டத்தின் கீழ் இலவச தள்ளுவண்டிகள் வழங்கிய கூடலூர் நகராட்சி..

X
சாலையோர

சாலையோர வியாபாரிகளுக்கு தள்ளுவண்டிகள் வழங்கிய கூடலூர் நகராட்சி..

Theni District News | தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சி பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு கம்பம் எம்.எல்.ஏ ராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி எம்.எல்.ஏ மகாராஜன் மற்றும் நகர மன்ற தலைவர் பத்மாவதி லோகந்துரை தலைமையில் இலவச வணிக தள்ளுவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சி பகுதியில், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு இலவச தள்ளுவண்டிகளை எம்.எல்.ஏக்கள் தலைமையில் வழங்கினார்கள்.

இலவச தள்ளுவண்டிகள் :-

தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சியில் மத்திய அரசின் திட்டமான தீனதயாள் அந்தியோதயா யோஜனா (Deen Dayal Upadhyaya Antyodaya Yojana), தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கம் திட்டம் சார்பில் கூடலூர் பகுதியில் சாலை ஓரங்களில் வியாபாரம் நடத்தி வரும் வியாபாரிகளுக்கு இலவச தள்ளுவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள நகராட்சி பகுதிகளில்,வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு இலவசமாக தள்ளு வண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது.

30 பேருக்கு இலவச தள்ளுவண்டிகள்

அதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சி பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு கம்பம் எம்.எல்.ஏ ராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி எம்.எல்.ஏ மகாராஜன் மற்றும் நகர மன்ற தலைவர் பத்மாவதி லோகந்துரை தலைமையில் இலவச வணிக தள்ளுவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தள்ளுவண்டிகள்

நகராட்சி பகுதிகளில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள சாலையோர வியாபாரிகள் தேர்வு செய்யப்பட்டு 30 நபர்களுக்கு தள்ளுவண்டிகள் வழங்கப்பட்டன.அதனைத்தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் இதர நபர்களுக்கு தள்ளுவண்டிகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் படிக்க :  ஒரு லிட்டர் டீசலில் ரயில் எத்தனை கிலோ மீட்டர் ஓடும்னு தெரியுமா...? வாங்க தெரிஞ்சிக்கலாம்..!

இந்த நிகழ்ச்சியில் கூடலூர் நகராட்சி ஆணையாளர் காஞ்சனா மற்றும் நகராட்சி உறுப்பினர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Theni