ஹோம் /தேனி /

சின்னமனூரில் சிறுதானியங்களில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் இலவச பயிற்சி

சின்னமனூரில் சிறுதானியங்களில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் இலவச பயிற்சி

தேனி

தேனி மாவட்டம் சின்னமனூர்

Theni Latest News | தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள காமாட்சிபுரத்தில் சிறுதானியங்கள் மூலம் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் இலவச பயிற்சி முகாம் நடைபெற்றது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni Allinagaram | Theni

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள காமாட்சிபுரத்தில் அமைந்துள்ள சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் மற்றும் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையம் இணைந்து சிறு தானியங்கள் மூலம் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்து அதிலிருந்து எவ்வாறு வருமானம் பெறுவது என்ற பயிற்சி வகுப்பு இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது

சென்டெக்ட் வேளாண் அறிவியல் பயிற்சி மையத்தின் திறன் மேம்பாட்டு பயிற்சியாளர் ரம்யா சிவசெல்வி தலைமையில் , கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட பல்வேறு வகையான சிறுதானியங்கள் மூலம் பிஸ்கட், கேக், ஐஸ்கிரீம் உள்ளிட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்து தயாரிக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்து தொழில் முனைவராக மாற்றும் திறன் மேம்பாட்டு இலவச பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த பயிற்சி வகுப்பில் பெண்கள் ஆண்கள் என 20 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சிறுதானியங்கள் மூலம் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சியை கற்றுக் கொண்டனர்

Published by:Arun
First published:

Tags: Local News, Theni