ஹோம் /தேனி /

தேனியில் அரசு பள்ளிகளில் இலவச சிலம்ப பயிற்சி.. ஆர்வமாக பங்கேற்கும் மாணவர்கள்..

தேனியில் அரசு பள்ளிகளில் இலவச சிலம்ப பயிற்சி.. ஆர்வமாக பங்கேற்கும் மாணவர்கள்..

X
தேனி

தேனி

Theni District News : தேனியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக சிலம்பம் பயிற்சி வழங்கப்படுகிறது.

  • Local18
  • 2 minute read
  • Last Updated :
  • Theni, India

அரசு பள்ளி மாணவ, மாணவிகள் தனித்திறமையை வளர்க்க வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசால் அரசுஇலவசமாக சிலம்பம் கராத்தே உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது

அதன்படி தமிழக அரசின் சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக சிலம்பம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தற்போதைய காலகட்டத்தில் தனியார் பள்ளி மாணவர்களுக்கு பள்ளியிலேயே சிலம்பம் கராத்தே உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் தனியார் பள்ளி மாணவர்கள் பள்ளியில் பயிற்சி பெறுவது மட்டுமல்லாமல் தனியாக கட்டணம் செலுத்தி சிலம்பம், நீச்சல், ஜூடோ உள்ளிட்ட வகுப்புகளுக்கு சென்று பயிற்சி பெற்றுக் கொள்கின்றனர்.

இதையும் படிங்க : தேனியில் கிடுகிடுவென உயர்ந்த மல்லிகை பூ விலை.. எவ்வளவு தெரியுமா?

ஆனால் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இந்த வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளதால் தமிழக அரசின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த விளங்கும் பயிற்சியாளர்களை கொண்டு அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவர்களுக்கு சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் இலவசமாக கற்றுத் தரப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தேனி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளும் இந்த முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை இலவசமாக சிலம்பம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு வாரத்திற்கு ஒருமுறை சிலம்ப பயிற்சியை அளித்து வருகின்றனர். கற்றுக்கொடுக்கும் பயிற்சியாளர்கள் சுழற்சி முறையில் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று சிலம்பம் பயிற்சி அளித்து வருகின்றனர்.

மேலும் படிக்க : சுற்றுலா பயணிகள் என்ஜாய் பண்ண ஏற்ற இடம் - கன்னியாகுமரி குற்றியார் இரட்டை அருவி!

மேலும் பள்ளி மாணவர்களுக்கு மனதினை ஒருநிலைப்படுத்தி அவர்களுக்கான திறமையை அதிகரிப்பதற்காக தமிழக அரசின் சார்பில் கராத்தே, சிலம்பம் பயிற்சி அளிக்கப்படுவதாக பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்தனர் .

இந்த பயிற்சியின் மூலம் சிறந்து விளங்கும் மாணவர்கள் பல்வேறு போட்டியில் பங்கேற்று பரிசுகளை வெல்வதற்கு வாய்ப்புகள் உள்ளதாகவும்மாநில தேசிய அளவிலான போட்டிகளில் பங்கு பெறும் வாய்ப்பு இங்கிருந்து உருவாகும் எனவும் பள்ளி ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மாணவர்களுக்கு தனித்திறமையை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்ட இத்திட்டத்தில் பள்ளி மாணவ மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று பயிற்சி பெறுவது ஆரோக்கியமான சமுதாயத்திற்கு வழிவகுக்கும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

First published:

Tags: Local News, Theni