ஹோம் /தேனி /

உடல் வலிமையை அதிகரிக்கும் இலவச ஆரோக்கிய பெட்டகம்... தேனி காமயகவுண்டன்பட்டியில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது...

உடல் வலிமையை அதிகரிக்கும் இலவச ஆரோக்கிய பெட்டகம்... தேனி காமயகவுண்டன்பட்டியில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது...

X
தேனி

தேனி

Physical Strength : தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டி பேரூராட்சி பகுதியில் உலக சித்த தினம், அகஸ்தியர் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இலவசமாக சித்த ஆரோக்கிய பெட்டகம் வழங்கப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

முனிவர்களில் தலை சிறந்த முனிவரான அகஸ்தியர் பிறந்தநாள் உலக சித்த தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதனைப் பொருட்டு பொதுமக்களுக்கு இலவச ஆரோக்கிய பெட்டகம் சித்த மருத்துவரால் வழங்கப்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து இன்றைய தினத்தில் தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டி பேரூராட்சி பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரசு சித்த மருத்துவரான சிராஜுதீன், சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு காமயக்கவுண்டன்பட்டி பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் அமுக்கிரா சூரணம் மற்றும் நெல்லிக்காய் லேகியம் அடங்கிய இலவச ஆரோக்கிய சித்த மருத்துவ பெட்டகம் வழங்கினார்.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகப்படுத்தவும் , உடல் சோர்வு நீங்கி உடல் உறுதியுடன் இருக்க உதவும் சித்த மருந்துகள் அடங்கியப் பெட்டகம் சுமார் 100க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது . மிகவும் அரிதாக கிடைக்கும் நெல்லிக்காய் லேகியம் அடங்கிய இந்த பெட்டகம் பொது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என அரசு சித்த மருத்துவரான சிராஜுதீன் கூறினார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் வேல்முருகன், துணைத்தலைவர் கஸ்தூரி பாஸ்கரன் , மருத்துவ அலுவலர் டாக்டர் ஜான்சிராணி ரெங்கீஸ்வரன், அரங்கசாமி, மனோகரன் , மருந்தாளுநர் பசும்பொன் பணியாளர் கனகராஜ், கம்பம் ஒன்றிய செயலாளர் தங்கபாண்டியன் மற்றும் காமய கவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார மருத்துவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து சித்த மருத்துவர் சிராஜுதீன் கூறுகையில், "இந்த வருடத்தின் சித்த மருத்துவ தின நோக்கம், மக்களின் ஆரோக்கிய வாழ்விற்கான சித்த மருத்துவ உணவுமுறைகள் மற்றும் ஊட்டச்சத்து மக்களுக்கு வழங்கப்பட்ட ஆரோக்கியம் பெட்டகத்தில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அமுக்கரா மாத்திரைகள், விட்டமின் சி அதிகம் உள்ள நெல்லிக்காய் லேகியம்,

உடல் வலி போக்கும் குந்திரிகத் தைலம், வாதகேசரி தைலம், நன்கு பசியைத் தூண்டும் பஞ்சாங்குலத் தைலம் டாம்பிடைசர் டானிக்

போன்ற மருந்துகள் அடங்கியுள்ளன. பொதுமக்களுக்கு பயனுள்ளதாக அமையும் இந்த ஆரோக்கியபட்டகம் சிறப்பு முகாம்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது” என கூறினார்.

First published:

Tags: Local News, Theni