முகப்பு /தேனி /

தேனியில் போட்டித்தேர்வுக்கான இலவச பயிற்சி - மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு

தேனியில் போட்டித்தேர்வுக்கான இலவச பயிற்சி - மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு

இலவச பயிற்சி  

இலவச பயிற்சி  

Theni District | தேனி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போட்டித்தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுவவதாகவும் இதனை பயன்படுத்திக்கொள்ளுமாறும் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போட்டித்தேர்வுக்கு இலவச பயிற்சி அளிப்பது தொடர்பாக, தேனி மாவட்ட கலெக்டர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தால் 11,409 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு கடந்த மாதம் 18ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற 17ஆம் தேதி ஆகும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்குமேல் கல்வித்தகுதி உடைய மனுதாரர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.  வயது வரம்பு 18 முதல் 27 வரை.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதைெயாட்டி தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தன்னார்வ பயிலும் வட்டத்தின் சார்பில் மத்திய அரசு தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளது. இதில், தேர்ந்த வல்லுனர்களைக் கொண்டு தேர்வுக்கான பாடத்திட்டத்தின்படி வகுப்புகள் நடத்தப்படும்.

Must Read : பசுமை... இயற்கையின் பேரழகு... மனம் விரும்பும் மாஞ்சோலைக்கு ஒரு டிரிப் போகலாம்!

பயிற்சி வகுப்பில் மாதிரி தேர்வுகள் நடத்தப்படும். எனவே போட்டித்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை தொடர்பு கொண்டு பயிற்சியில் சேர்ந்து பயன் பெறலாம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

First published:

Tags: Competitive Exams, Local News, Theni