தேனி மாவட்டத்தில் கனரா வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் சுயதொழில் செய்ய விருப்பம் உள்ள இளைஞர்களுக்கு, இலவச செல்போன் சர்வீஸ் செய்வதற்கான பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
தேனி மாவட்டம், தேனி தாலுகா ஆபிஸ் எதிர்ப்புறம் அமைந்துள்ள கனரா வங்கி, தேனி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் கிராமப்புற இளைஞர்களை தொழில் முனைவோராக்கும் நோக்கத்தோடு பல்வேறு இலவச தொழிற்பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகிறன. அந்த வகையில், தற்போது தேனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமப்புற இளைஞர்களை தொழில் முனைவோராக்கும் நோக்கத்தோடு 30 நாட்கள் இலவச செல்போன் பழுது நீக்கும் பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற வருகிறன.
தற்போதைய நவீன காலகட்டத்தில் செல்போன் துறை அதீத வளர்ச்சியை கண்டுள்ளது. அனைத்து மக்களாலும் பயன்படுத்தக்கூடிய பொருளாக செல்போன் இருப்பதால், செல்போன் சர்வீஸ் தொழில் தொடர்ந்து வளரும் தொழிலாகவே உள்ளது. இதனால் கிராமப்புற இளைஞர்களை ஒருங்கிணைத்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கும், சொந்த தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் உள்ள இளைஞர்களுக்கும் கனரா வங்கியின் சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் இலவச செல் போன் சர்வீஸ் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த இலவச பயிற்சி வகுப்பில் தேனி மாவட்டத்திலிருந்து சுமார் 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த பயிற்சி வகுப்பில் செல்போன் பற்றிய பொது அறிவு, செல்போன் பழுது நீக்கம், சாப்ட்வேர், உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள், வகுப்புகள் மூலமாகவும் செய்முறை மூலமாகவும், நன்கு தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்களைக் கொண்டு இலவசமாக அளிக்கப்பட்டு வருகிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
RSETI ( RURAL SELF EMPLOYMENT TRAINING INSTITUTE ) என்ற நிறுவனம் இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பயிற்சியாளர்கள் மூலம் தரமான முறையில் பயிற்சி அளிக்கப்படுவதாக பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயிற்சி கலந்துகொண்ட இளைஞர்கள் கூறுகின்றனர். பயிற்சி வகுப்பின் நிறைவு நாளில், இதில் கலந்து கொண்ட இளைஞர்களுக்கு தேர்வு வைக்கப்பட்டு, தேர்வில் வெற்றி பெற்ற இளைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் என பயிற்சியாளர் கூறினார்.
நவீன தொழில்நுட்பத்துடன் பயிற்சியை கற்றுக் கொண்ட இளைஞர்கள் செல்போன் பழுதுநீக்கும் கடையைத் தொடங்கலாம் எனவும் பயிற்சியாளர் தெரிவித்தார். பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள இளைஞர்களுக்கும், தொழில் தொடங்குவதற்கு ஆர்வம் காட்டும் இளைஞர்களுக்கும் அரசின் திட்டங்கள் மூலம் கடன் உதவி பெறுவதற்கும் உதவிகள் அளிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Theni