ஹோம் /தேனி /

தேனியில் பள்ளி மாணவிகளுக்கு இலவச ரத்தசோகை பரிசோதனை முகாம்  

தேனியில் பள்ளி மாணவிகளுக்கு இலவச ரத்தசோகை பரிசோதனை முகாம்  

X
ரத்த

ரத்த சோகை பரிசோதனை முகாம்  

Theni News: தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் பள்ளி மாணவிகளுக்கு இலவச ரத்தசோகை பரிசோதனை முகாம் நடைபெற்றது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Theni Allinagaram, India

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் உள்ள பாத்திமா பெண்கள் பள்ளியில் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் ஆயுஷ் ஸ்வத்யா யோஜனா திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது.

இரத்த சோகை விழிப்புணர்வு

இரத்த சோகையை ஒழிக்க மத்திய ஆயுஷ் அமைச்சகம் பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவ மாணவிகளிடையே குறிப்பாக தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவ மாணவிகளுக்கு ரத்தசோகை பற்றிய பரிசோதனை செய்து அதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் தேனி மாவட்டம் உத்தமபாளையம் பாத்திமா பெண்கள் பள்ளியில் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் ஸ்வத்யா யோஜனா திட்டத்தின் கீழ் இரத்த சோகைக்கான சிறப்பு இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது .

தேசிய சித்த மருத்துவ நிறுவனம் மற்றும் இந்திய மருத்துவம் மற்றும்  ஹோமியோபதி இயக்குனரகம் இணைந்து நடத்திய இந்த முகாமில் 100க்கும் அதிகமான மாணவிகளுக்கு ரத்த சோகை தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பள்ளியில் பயிலும்  10 வயது முதல் 18 வயது வரை உள்ள மாணவிகளுக்கு நடத்தப்பட்ட சிறப்பு மருத்துவ முகாம் மூலம் எடை,உயரம், ரத்தத்தின் அளவு ஆகியவை பரிசோதிக்கப்பட்டு இரத்த சோகையால் பாதிக்கப்பட்ட மாணவ மாணவியர்களை தொடர்ந்து கண்காணித்து இலவசமாக மருத்துவ ஆலோசனைகள் மற்றும் மருந்துகள் வழங்கப்பட உள்ளது.

பள்ளி மாணவிகளுக்கு இரத்த சோகைக்கான விழிப்புணர்வு மற்றும் இலவச பரிசோதனை மருத்துவ முகாம் திட்ட மேலாளர் டாக்டர் .ராஜமஞ்சரி தலைமையில் நடைபெற்றது. இரத்த பரிசோதனை செய்து கொண்ட மாணவிகளுக்கு சித்த மருந்துகளான மாதுளை மணப்பாகு, அன்னபேதி, செந்தூரம், பாவன கடுக்காய் போன்ற மாத்திரைகளும் கரிசாலை லேகியம் ஆகியவை வழங்கப்பட்டன.

இதையும் படிங்க :  திருப்பதிக்கு நிகராக போற்றப்படும் கோவில் - புதுக்கோட்டை மலையடிப்பட்டி குடைவரைக்கோவிலின் சிறப்புகள்!

மேலும் மாணவிகளுக்கு இரத்தசோகைக்காண சத்துஉள்ள உணவு உன்பதற்கான காய்கறிகள் மற்றும் பழம் வகைகள் குறித்து விழிப்புணர்வு நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் தலைமைஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாணவிகள்

மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர்.

First published:

Tags: Local News, Tamil News, Theni