முகப்பு /தேனி /

கம்பம் சண்முகா நதி அணை கால்வாயை சீரமைக்க அடிக்கல் நாட்டு விழா..

கம்பம் சண்முகா நதி அணை கால்வாயை சீரமைக்க அடிக்கல் நாட்டு விழா..

X
கம்பம்

கம்பம் சண்முகா நதி அணை கால்வாயை சீரமைக்க அடிக்கல் நாட்டு விழா

Theni District News | தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சண்முகாநதி அணையின் கால்வாய் பகுதிகளை தூர்வாரும் பணி தொடங்குவதற்கான பூஜை நடத்தப்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சண்முகா நதி அணையின் கால்வாய் பகுதிகளை தூர்வாரும் பணி தொடங்குவதற்கான பூஜை நடத்தப்பட்டு, கம்பம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராமகிருஷ்ணன் ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மகாராஜன் தலைமையில் பணிகள் துவங்கப்பட்டது.

தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் சண்முகாநதி அணை அமைந்துள்ளது. 52 அடி உயரம் உள்ள சண்முகா நதி அணையில் இருந்து எரசக்கநாயக்கனூர் ஓடைப்பட்டி காமாட்சிபுரம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளில் சுமார் 1,417 ஏக்கர் நிலப்பரப்பில் பாசன வசதி பெறுவதற்காக 18 கிலோமீட்டர் தொலைவிற்கு சண்முகா நதி அணையில் இருந்து ஓடைப்பட்டி வரை வரத்து வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வரத்து கால்வாய் பகுதிகளை அணையை கட்டியது முதல் பல வருடங்களாக தூர்வாராமல் இருப்பதால் கடந்த பருவ மழையின்போது தண்ணீர் திறந்து விடப்பட்டு பாசன வசதியை முழுமையாக பெறாமல் தண்ணீர் வீணாவதாக விவசாயிகள் குற்றம்சாட்டி தேனி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

இதையும் படிங்க : கண்களுக்கு விருந்து படைக்கும் கம்பம் பள்ளத்தாக்கு - திராட்சை தோட்டங்களும், பசுமையும் ஆளையே மயக்கும்!

அந்த, மனுவினை பரிசீலனை செய்த தேனி மாவட்ட ஆட்சியர் தமிழக முதல்வரின் உத்தரவின்பேரில் ரூ.60.74 கோடி மதிப்பில் வரத்து வாய்க்கால்களை சீரமைப்பதற்காக ஆணை பிறப்பித்தார். இந்நிலையில், வரத்து வாய்க்கால் தூர்வாரும் பணிக்காக பூமி பூஜை விழாவினை கம்பம் எம்.எல்.ஏ ராமகிருஷ்ணன் ஆண்டிபட்டி எம்.எல்.ஏ மகாராஜன் ஆகியோர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் சஜீவனா முன்னிலையில் திட்டத்தை மேற்கொள்வதற்காக பூஜை செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது.

பல வருடங்களாக கடைமடை பகுதி விவசாயிகள் பாசன வசதி பெறாமல் பாதிக்கப்பட்டு வந்ததாகவும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தமிழக முதல்வர் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு திட்டப் பணிகளை மேற்கொண்டதற்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.

First published:

Tags: Local News, Theni