ஹோம் /தேனி /

சுருளி அருவியில் குளித்து மகிழ திட்டமா? - வனத்துறையின் இந்த அறிவிப்பை முதலில் படியுங்கள்

சுருளி அருவியில் குளித்து மகிழ திட்டமா? - வனத்துறையின் இந்த அறிவிப்பை முதலில் படியுங்கள்

சுருளி அருவி 

சுருளி அருவி 

Suruli waterfalls | தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவிக்கு செல்ல திட்டமிட்டுள்ள சுற்றுலா பயணிகள் வனத்துறையினர் விடுத்துள்ள இந்த அறிவிப்பை முதலில் தெரிந்துகொள்ளுங்கள்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவி சுற்றுலா தலமாகவும் ஆன்மிக தலமாகவும் இருந்து வருகிறது. இந்த அருவி உத்தமபாளையத்தில் இருந்து 18 கி.மீ தொலைவிலும், கம்பத்திலிருந்து 8 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள இயற்றை எழில் சூழ்ந்த சுற்றுலா இடமாகும்.

இங்கே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் சுமார் 40 அடி உயரம் கொண்ட இந்த சுருளி அருவிக்கு வந்து நீராடி மகிழ்வது வழக்கம். மேலும், அருகில் உள்ள சுருளி வேலப்பர், விபூதி குகை கோவில், கைலாசநாதர் கோவில் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று சாமி தரிசனம் செய்வதை பலரும் விரும்புகின்றனர்.

இந்நிலையில், தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு கன மழை பெய்தது. இதனால், சுருளி அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான அரிசி பாறை, ஈத்தக்காடு, தூவானம் அணை, மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் ஆங்காங்கே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதனால், சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதித்து வனத்துறை அறிவித்துள்ளது. நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுளளது.

Must Read : திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்கள் - பார்த்து என்ஜாய் பண்ணுங்க!

மழை குறைந்தால் வெள்ளப்பெருக்கும் குறைந்து, அதன் பின்னர், அருவியில் சீரான தண்ணீர் கொட்டும், அப்போது வனத்துறையினர் மறு அறிவிப்பை வெளியிடுவார்கள். அதன் பின்னர் சுற்றுலா பயணிகள் குளிர்ச்சியும், அழகும் நிறைந்த அருவியில் குளித்து மகிழலாம்.

First published:

Tags: Falls, Local News, Theni, Tourist spots