முகப்பு /செய்தி /தேனி / தேனி கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

தேனி கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

கும்பகரை அருவி

கும்பகரை அருவி

தேனி கும்பக்கரை அருவியில் குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறை அனுமதியளித்துள்ளது.

  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் நீர்வரத்து சீரானதால் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது கும்பக்கரை அருவி. கொடைக்கானல், வட்டக்கானல் உள்ளிட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று முன்தினம் பெய்த மழையால் கும்பக்கரை அருவியில் திடீரென காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.‌

வனத்துறையினரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் அருவியில் இருந்த சுமார் 30க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் அப்போது வெளியேற்றப்பட்டனர்.‌ இதையடுத்து பாதுகாப்பு கருதி அருவியின் நீர்வரத்து சீராகும் வரை சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தேவதானப்பட்டி வனத்துறையினர் தற்காலிக தடை விதித்தனர்.

இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளான கொடைக்கானல் வனப்பகுதிகளில் மழை குறைந்து நேற்று மாலைக்கு பின் நீர்வரத்து சீரானது. இதனால் இன்று முதல் கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.‌

First published:

Tags: Theni