தேனி மாவட்டம் சுருளி அருவியில் குளிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து 8 கி.மீ தொலைவிலும், உத்தமபாளையத்தில் இருந்து 18 கி.மீ தொலைவிலும், அமைந்துள்ள இயற்றை எழில் சூழ்ந்த சுற்றுலா தலமான சுருளி அருவி. இது சுற்றுலா தலமாகவும் ஆன்மிக தலமாகவும் இருந்து வருகிறது. இந்த அருவிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.
சுமார் 40 அடி உயரம் கொண்ட இந்த சுருளி அருவிக்கு ஏராளமானவர்கள் வந்து நீராடி மகிழ்ந்து உற்சாகடடைவர். மேலும், அருகில் உள்ள சுருளி வேலப்பர், விபூதி குகை கோவில், கைலாசநாதர் கோவில் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இந்நிலையில், தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சில நாட்களாக கன மழை பெய்ததால், சுருளி அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான அரிசி பாறை, ஈத்தக்காடு, தூவானம் அணை, மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் ஆங்காங்கே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்தது.
இதனால் சுற்றுலா பயணிகள் சுருளி அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் சார்பாக பொதுமக்களின் பாதுகாப்பு கருதி தடை விதிக்கப்பட்டது. அதன்படி, அருவி பகுதியில் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் யாரும்வர வேண்டாம் என கம்பம் கிழக்கு வனச்சரக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் அருவியில் நீர்வரத்து குறைந்து தண்ணீர் சீராக கொட்டுகிறது. எனவே, அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். இதற்கிடையில் வனத்துறையினர் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ஆக, சுற்றுலா பயணிகள் சுருளி அருவியில் குளித்து மகிழலாம். இந்த அறிவிப்பால் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Falls, Local News, Theni