Home /theni /

தொடர்மழை... தேனி கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

தொடர்மழை... தேனி கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தேனி மாவட்டம் போடி பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India
    தேனி மாவட்டம் போடி மேற்கு மலை தொடர்ச்சி மலைகளிலும் தமிழக எல்லை பகுதி களிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மலைகளில் இருந்து வரும் தண்ணீரால் கொட்டகுடி சாம்பலற்று அணை நிரம்பி வருகிறது.

    அணையிலிருந்து வெளியேறும் தண்ணீரால் கொட்டக்குடி ஆற்றில் மழை நீர் தொடர்ந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தென்மேற்கு பருவ மழையின் தாக்கத்தால் அவ்வப்போது தொடர்ந்து பெய்து வருவதால் போடியில் உள்ள 33 வார்டுகளுக்கு குடிநீர் பஞ்சத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    ஒட்டு மொத்த மழைநீரும் வெளியேறும் வெளியேறுவதால் கொட்டகுடி ஆற்றில் காட்டாறு வெள்ளம் கரைபுரண்டு ஓடி மூக்கரை பிள்ளையார் பெரும் மெகா அணையை தாண்டி கடந்து வருகிறது.

    அத்துடன், இந்த கனமழை காரணமாக பங்காரு சாமி கண்மாய், சிறுகுளம், ஒட்டுகுளம், சங்கரப்ப நாயக்கன் குளம் உள்ளிட்ட பல்வேறு குளங்கள் நிரம்பி வருகின்றன. காட்டாறு வெள்ளம் ஏரி, குளங்களில் தேங்குவதால் நிலத்தடி நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால், அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    இந்நிலையில்,ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாகஇருக்குமாறும், ஆற்றில் யாரும் இறங்க வேண்டும் எனவும்அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Theni

    அடுத்த செய்தி