ஹோம் /தேனி /

தேனியில் மஞ்சளாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை...

தேனியில் மஞ்சளாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை...

தேனி

தேனி

Theni | மஞ்சளாறு அணை திறக்கப்படுவதால், தேனி மாவட்டத்தில் மஞ்சளாறு கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ளது 57 அடி நீர்தேக்க அளவு கொண்ட மஞ்சளாறு அணை. இதன் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

அதன்படி, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள தலையாறு, வரட்டாறு, மூலாறு பகுதிகளில் மழையால் பெய்து வருகிறது. இதனால், மஞ்சளாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணை முழு கொள்ளளவை எட்டி வருகிறது.

இதனால், அணையில் இருந்து, உபரி நீர் ஆற்றில் திறக்கப்படுவதால், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் வசிக்கும் கரையோர பகுதிகளான கொங்குவார்பட்டி, ஜி.கல்லுப்பட்டி, வத்தலகுண்டு, விருவீடு உள்ளிட்ட பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : தேனி மாவட்டத்தில் நிலச்சரிவால் திசை மாறி கேரளாவுக்கு செல்லும் நீர்வீழ்ச்சி..! 

அதன்படி, கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், ஆற்றில் இறங்கவே, குளிக்கவோ வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Theni