முகப்பு /தேனி /

தேனியின் முதல் புத்தக திருவிழா.. லோகோவில் கோம்பை நாய் இனத்துக்கு சிறப்பு கவுரவம்!

தேனியின் முதல் புத்தக திருவிழா.. லோகோவில் கோம்பை நாய் இனத்துக்கு சிறப்பு கவுரவம்!

X
தேனி

தேனி புத்தக திருவிழா

Theni Book Fair 2023 | தேனி பகுதியில் உள்ள தனியார் மில் மைதானத்தில் மார்ச் 3ஆம் தேதி முதல் 12ம் தேதி வரை புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Theni Allinagaram, India

தேனி மாவட்டத்தில் நடைபெறும் முதல் புத்தகத் திருவிழாவை ஒட்டி, பொதுமக்களை கவரும் வகையிலும் தேனி மாவட்டத்தின் பாரம்பரியத்தை வெளிக்கொணரும் வகையில் கோம்பை நாய் உருவம் பொறித்த படத்தினை தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா வெளியிட்டார். இதற்கு சமூக ஆர்வலர்களும் புத்தகப் பிரிவுகளும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்

முதல்புத்தகத் திருவிழா :-

தேனி பகுதியில் உள்ள தனியார் மில் மைதானத்தில் மார்ச் 3ஆம் தேதி முதல் 12ம் தேதி வரை புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது. தேனி மாவட்டத்தில் நடைபெற உள்ள முதல் புத்தகத் திருவிழாவை ஒட்டி பொது மக்கள் கவரும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

முதல் புத்தக திருவிழாவை ஒட்டி தேனி மாவட்டத்தின் சிறப்பை வெளிக் கொணரும் வகையில் கோம்பை நாய் உருவம் பொறித்த படத்தினை தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தேனி மாவட்ட எஸ்பி டோங்கரே பிரவீன் உமேஷ் முன்னிலையில் வெளியீடு செய்தார்.

லோகோவில் கோம்பை நாய்

இந்த புத்தகத் திருவிழாவில் 40க்கும் மேற்பட்ட சிறப்பு அரங்குகள் அமைக்க ஏற்பாடுகள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும், தேனி மாவட்டத்தின் புகழ்பெற்ற பாரம்பரியமிக்க கோம்பை நாய் பற்றிய குறிப்புகள், கட்டுரைப் போட்டிகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற இருப்பதாக தேனி ஆட்சியர் அவர்கள் தெரிவித்தார்கள்.

இந்நிகழ்ச்சியை ஒட்டி துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்கள் ஏராளமான கலந்து கொண்டனர். புத்தகத் திருவிழாவை ஒட்டி தேனியின் பெருமைமிகு கோம்பை நாய் குறித்த இலட்சினை வெளியிடப்பட்டதற்கு சமூக வலைத்தளங்கள் முழுவதும் சமூக ஆர்வலர்களும் புத்தக பிரியர்களும் தங்களது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது

First published:

Tags: Book Fair, Local News, Theni