முகப்பு /தேனி /

தேனி | கிணற்றில் தவறி விழுந்த கடாமான் - பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறை

தேனி | கிணற்றில் தவறி விழுந்த கடாமான் - பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறை

X
மீட்கப்பட்ட

மீட்கப்பட்ட மான்

Theni | தேனி மாவட்டம் கூடலூரில் கிணற்றில் தவறி விழுந்த மானை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் கூடலூர் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் உள்ள பதினெட்டாம் கால்வாய் தொட்டி பாலம் அருகே உள்ள தோட்டத்தில் கிணற்றில் தவறி விழுந்த கடா மானை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக

மீட்டனர்.

மான் மீட்பு

தேனி மாவட்டம் கூடலூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் உள்ள தொட்டி பாலம் அருகே எல்ஐசி சுருளி வேல் என்பவருக்கு சொந்தமான தோப்பு உள்ளது. இந்த தோப்பில் வழியாக வந்த பாண்டிய ராஜன் என்பவர் தோப்பில் உள்ள கிணற்றில் கடாமான் ஒன்று தவறி விழுந்ததை கண்டுள்ளார்.

கிணற்றில் விழுந்து உயிர்காக போராடிய மானை கண்ட பாண்டியராஜன் உடனடியாக கம்பம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

மீட்கப்பட்ட மான்

உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கம்பம் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜலட்சுமி தலைமையிலான தீயணைப்புத் துறையினர் கிணற்றில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஒரு வயதுள்ள கடா மானை ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி பத்திரமாக மீட்டனர் .

வாத்தி படத்தை வரவேற்று புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கிய தனுஷ் ரசிகர்கள்..

கம்பம் மேற்கு வனச்சரக அலுவலர் அன்பு மற்றும் வனக்காப்பாளர் பாலாஜி, மீட்கப்பட்ட மானிற்கு ஏதேனும் காயம் ஏற்பட்டுள்ளதா என ஆராய்ந்து அதற்கு பின்னர் அடர்ந்த வனப்பகுதிக்குள் மானை விட்டனர் .

First published:

Tags: Local News, Theni