Home /theni /

நவீன சலவையகம் அமைக்க நிதியுதவி - தேனி மக்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு

நவீன சலவையகம் அமைக்க நிதியுதவி - தேனி மக்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தேனியில் நவீன சலவையகங்கள் அமைக்க நிதியுதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தேனி மாவட்ட ஆட்சியர் முரளீதரன் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India
    பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், மாறிவரும் சூழலுக்கு ஏற்பவும், 10 நபர்களை கொண்ட குழுவாக அமைத்து, நவீன சலவையகங்கள் அமைக்க தலா ரூ.3 லட்சம் வீதம் தமிழகம் முழுவதும் 25 அலகுகள் ஏற்படுத்த அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

    சலவைத் தொழிலில் ஈடுபட்டு வரும் இவர்கள் 10 நபர்களை கொண்டு ஒரு குழு அமைத்து, அக்குழுவிற்கு நவீன முறை சலவையகம் அமைக்க தேவைப்படும் உபகரணங்கள் வாங்க அதற்கான நிதி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, தேனியில் நவீன சலவையகங்கள் அமைக்க பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் குழுக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் முரளீதரன் தெரிவித்துள்ளார்.

    இதற்கு, பயனாளிகள் 20 வயது இருக்க வேண்டும் என்றும் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூலம் பயிற்சி பெற்ற குழுக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

    மேலும், இந்த நிதியுதவியைப் பெற10 நபர்கள் குழுவாக இருப்பது அவசியம் என்றும், அவர்களுக்கு ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்குள் இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ள மாவட்ட ஆட்சியர், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை செப்டம்பர் 20 ம் தேதிக்குள் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகம் சமர்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Theni

    அடுத்த செய்தி