தேனி மாவட்டத்தில் 2023 ஜனவரி 1ம் தேதியை தகுதி நாளாக கொண்டு கடந்த ஆண்டு நவம்பர் 9ம் தேதி முதல் டிசம்பர் 8ம் தேதி வரை வாக்காளர் சுருக்க திருத்த முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் வாக்காளர் சேர்க்கை நீக்கம் முகவரி, தொகுதி மற்றும் உள்ளிட்ட விவரங்கள் மாற்று தொடர்பான பணிகள் நடைபெற்றது. அதன் இறுதிப்பட்டியல் 2023ம் ஆண்டு ஜனவரி முதல் தேதியை தகுதி நாளாக கொண்ட வாக்காளர் பட்டியலின்படி, தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் போடிநாயக்கனூர் ஆண்டிபட்டி பெரியகுளம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 11 லட்சத்து 15 ஆயிரத்து 556 வாக்காளர்கள் உள்ளனர்.
அவர்களில் 5 லட்சத்து 46 ஆயிரத்து 686 ஆண் வாக்காளர்கள், 5,68,675 பெண் வாக்காளர்கள், 195 மூன்றாம் பாலினத்தவரும் அடங்குவர். அதன்படி தேனி மாவட்டத்தில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் 21,990 அதிகமாக உள்ளனர். இந்த வாக்காளர் இறுதிப்பட்டியல் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் அனைத்து தொகுதி ஆர்டிஓ முன்னிலையில் தேனி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார் .
இந்நிலையில், வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியல் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலகங்கள், ஓட்டு சாவடிகளில் பார்வைக்காக வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாக்காளர்கள் தங்களது பெயர் சரியான விவரத்துடன் இடம் பெற்றுள்ளது என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டுமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் வாக்காளர்களாக சேர தேர்தல் ஆணையத்தின் voter helpline app மற்றும் www.nsvp.in என்ற இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Theni