முகப்பு /தேனி /

உத்தமபாளையத்தில் குறைதீர்க்கும் கூட்டம்.. அடுக்கடுக்காய் கோரிக்கை வைத்த விவசாயிகள்!

உத்தமபாளையத்தில் குறைதீர்க்கும் கூட்டம்.. அடுக்கடுக்காய் கோரிக்கை வைத்த விவசாயிகள்!

X
விவசாயிகள்

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்  

Theni | தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சஜ்ஜீவனா தலைமையில் நடைபெற்றது.

  • Last Updated :
  • Uthamapalayam, India

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் வட்டாட்சியர் அலுவலகம் அருகே உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சஜ்ஜீவனா தலைமையில் நடைபெற்றது.

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில், வேளாண்மை சம்பந்தமான நீர்ப்பாசனம், வேளாண்மை கடன் உதவிகள், வேளாண்மை இடுபொருட்கள், வேளாண்மை எந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் பற்றிய முறையீடுகள் பற்றி விவாதிக்கப்பட்தது. இந்த கூட்டத்தில் கம்பம் கூடலூர் உத்தமபாளையம் கோம்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு பல்வேறு குறைகளை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கையாக வைத்தனர்.

குறிப்பாக தக்காளி மற்றும் முட்டைக்கோஸ் விலை வீழ்ச்சி அடைந்த நிலையில் அவற்றிற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். வனப்பகுதியில் மலை மாடுகளை மேய்ப்பதற்கு வனத்துறையினர் அனுமதி அளிக்க வேண்டும் எனவும், உத்தமபாளையம் தாலுகாவில் தூர்வாரப்படாமல் உள்ள கால்வாய்களை தூர்வாரநடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்.

லோயர்கேம்ப் பகுதியில் அமைந்துள்ள பென்னிகுவிக் மணிமண்டபத்தில் உள்ள முட்புதர்களை அகற்றி மண்டபத்திற்கான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் முன்வைத்தனர்.

இந்த கூட்டத்தில் தேனி மாவட்ட ஆட்சியர் சஜ்ஜீவனா, வட்டாட்சியர், வேளாண் துறை அதிகாரிகள் வனத்துறை அதிகாரிகள் , மின்வாரிய அதிகாரிகள், நூற்றுக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

top videos
    First published:

    Tags: Grievance Officer, Local News, Theni