மத்திய அரசைக் கண்டித்து பொம்மையகவுண்டன் பட்டியில் சாலை பிள்ளையார் கோவில் பகுதியில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் மாபெரும் டிராக்டர் பேரணி நடைபெற்றது.
டிராக்டர் பேரணி
தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட பொம்மைய கவுண்டன்பட்டி சாலை பிள்ளையார் கோவில் பகுதியில் மத்திய அரசை கண்டித்து ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஒருங்கிணைப்பாளர் கண்ணன் தலைமையில் மாபெரும் டிராக்டர் பேரணி நடந்தது.
இப் பேரணியில் நாட்டின் தலைநகர் டில்லியில் ஓராண்டு காலத்திற்கும் மேலாக விவசாயிகளின் உறுதிமிக்க போராட்டத்தின் விளைவாக மத்திய அரசு மூன்று வேளாண் விரோத சட்டங்களை திரும்பப் பெருவதாக அறிவித்தது.
ஆனால் விவசாய சங்க தலைவர்களிடம் எழுத்துபூர்வமாக தரப்பட்ட எந்த உறுதிமொழியையும் மத்திய அரசு நிறைவேற்றவில்லை எனவும்,
எம். எஸ் சுவாமிநாதன் குழு பரிந்துறையின் அடிப்படையில் (C2+50%) விலை நிர்ணயம் செய்ய வேண்டும். அரசு கொள்முதலை உத்திரவாதப்படுத்த வேண்டும்.
சிறு, குறு, நடுத்தர விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளுக்கெதிரான மின்சார சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும்.
பயிர் காப்பீட்டு திட்டத்தை விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் மாற்றி அமைத்திட வேண்டும். பயிர் காப்பீட்டுதுறையில் தனியார் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களை வெளியேற்ற வேண்டும்.
லக்கிம்பூர் கேரி விவசாயிகள் படுகொலைக்கு காரணமான மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா தோனியை பதவிநீக்கம் செய்ய வேண்டும். நாடு முழுவதும் விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்ககளை திரும்பப்பெற வேண்டும்.
60 வயதை பூர்த்தி செய்த அனைத்து விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும், மாதம் ரூபாய் 6000/- ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இந்த மாபெரும் பேரணியானது பொம்மைய கவுண்டன்பட்டி சாலை பிள்ளையார் கோவிலில் துவங்கி பெரியகுளம் சாலை நேரு சிலை வழியாக சென்று மதுரை சாலை பங்களா மேட்டில் நிறைவடைந்தது.
சுருளி அருவியில் குளிக்க அனுமதி.. உற்சாகத்தில் சுற்றுலா பயணிகள்!
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Theni