முகப்பு /தேனி /

தேனி மாவட்ட விவசாயிகள் தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீடு செய்ய விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்ட விவசாயிகள் தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீடு செய்ய விண்ணப்பிக்கலாம்

பயிர் காப்பீடு

பயிர் காப்பீடு

Theni District | தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீடு செய்ய விண்ணப்பிக்கலாம் என்று தேனி மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் சீத்தாலட்சுமி தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டத்தில், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ், தோட்டக்கலை பயிர்களான வாழை, கத்தரி, முட்டைக்கோஸ், தக்காளி ஆகிய பயிர்களுக்கு காப்பீடு செய்ய விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

பயிர்காப்பீடு செய்வதால் அசாதாரண பருவ சூழல் அல்லது குறைவான மழையால் பயிர் சாகுபடி மேற்கொள்ள இயலாத நிலை, விதைப்பில் இருந்து அறுவடை வரை ஏற்படும் பயிர் இழப்புகள், புயல், ஆலங்கட்டி மழை, நிலச்சரிவு, வெள்ளம் போன்ற நிகழ்வுகளால் ஏற்படும் பயிர் இழப்புகளுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது.

அரசாணையின்படி, தேனி மாவட்டத்தில் அறிவிக்கை செய்யப்பட்ட 27 தொகுப்பு பிர்க்காவில் விவசாயிகள் பயிர்காப்பீடு செய்யலாம். வாழை பயிருக்கு ஏக்கருக்கு ரூ.3,371.55 பிரீமியம் செலுத்தி பயிர்காப்பீடு செய்யலாம். கத்தரி பயிருக்கு ஏக்கருக்கு ரூ.1,185.60 செலுத்தி காப்பீடு செய்யலாம். அதற்கு நாளை (செவ்வாய்க்கிழமை) கடைசி நாள்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

முட்டைக்கோஸ் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.1,155.95 செலுத்தி நாளைக்குள் காப்பீடு செய்ய வேண்டும். தக்காளி பயிருக்கு ஏக்கருக்கு ரூ.871.90 பிரீமியம் செலுத்தி நாளைக்குள் காப்பீடு செய்ய வேண்டும்.

Must Read : சிலிர்ப்பூட்டும் சின்னக் கல்லாறு அருவி... ஒரு என்ஜாய் ட்ரிப் போகலாம்!

இத்தகைய பயிர்களை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் காப்பீடு விண்ணப்பத்துடன் பதிவு கட்டணம், சிட்டா, அடங்கல், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் தங்கள் பகுதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், பொது சேவை மையங்கள் அல்லது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகம் மூலம் பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம் என்று தேனி தோட்டக்கலை துணை இயக்குனர் சீத்தாலட்சுமி தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Agriculture, Insurance, Local News, Theni