ஹோம் /தேனி /

தேனியில் 30ம் தேதி விவசாயிகள் குறைதீர் முகாம்

தேனியில் 30ம் தேதி விவசாயிகள் குறைதீர் முகாம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

Theni Farmers Grievance Meeting | தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 30-ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 30 ம் தேதி காலை 11 மணி அளவில் நடைபெறவுள்ளது.

இதில், தேனி மாவட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது குறைகள் மற்றும் விவசாயம் குறித்தும் அதன் தொடர்புடைய துறைகள் குறித்தும் குறைகளை தெரிவிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தலைமை தாங்குகிறார். கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு கோரிக்கைகள் குறித்து மனுக்கள் கொடுக்கலாம்.

இதில், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்று தங்களது குறைகளை தெரிக்கலாம். மேலும், இதில், வோளண்மை, தோட்டக்கலைத்துறை, நீர்பாசனம், கூட்டுறவு, தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம், கால்நடை, மின்சாரம் தொடர்புடைய கருத்துக்களை விவசாயிகள் தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில், விவசாயத்தில் புதிதாக அறிமுகம் செய்யப்படும் புதிய தொழில் நுட்பங்கள் குறித்தும் விளக்கமளிக்கப்படுகிறது.

மேலும், இதுகுறித்து விவசாயிகள் மனுவாகவும் சமர்ப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் விவசாய சங்க பிரதிநிதிகள் கூட்ட அரங்கிற்கு வரும் முன் கணிணியில் தங்களது பெயர் முகவரி, செல்போன் எண் உள்ளிட்டவை பதிவு செய்ய வேண்டும். மேலும், மனுக்களை கொடுக்கும் முன் ஒப்புதல் பெற்று, கணிணியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு கோரிக்கைகள் குறித்து மனுக்கள் கொடுக்கலாம். மனுக்கள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by:Karthick S
First published:

Tags: Local News, Theni