முகப்பு /தேனி /

50 சதவீத மானியத்தில் பண்ணை கருவிகள் - தேனி மாவட்ட விவசாயிகளே வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க

50 சதவீத மானியத்தில் பண்ணை கருவிகள் - தேனி மாவட்ட விவசாயிகளே வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க

வேளாண்மை

வேளாண்மை

Theni District | தேனி மாவட்ட விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் பண்ணை கருவிகள் வழங்கப்படும் என்று தேனி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தெரிவித்தார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்ட விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் பண்ணை கருவிகள் வழங்குவது தொடர்பாக, தேனி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராமசாமி செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், தேனி ஒன்றியத்தில் இத்திட்டம் அரண்மனைப்புதூர், கொடுவிலார்பட்டி, தப்புக்குண்டு, தாடிச்சேரி, பூமலைக்குண்டு, அம்பாசமுத்திரம், குப்பிநாயக்கன்பட்டி ஆகிய கிராமங்களில் செயல்படுத்தப்படுகிறது.

இந்த கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு இத்திட்டத்தின் கீழ் 50 சதவீத மானியத்தில் பண்ணைக்கருவிகள் வழங்கப்படுகிறது. அதன்படி மண்வெட்டி, கடப்பாரை, களைக்கொத்தி, சீனாத்தட்டு தலா 1, அரிவாள் 2 வழங்கப்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதன் மதிப்பு ரூ.3 ஆயிரம். 50 சதவீத மானியத்தில் இவை ரூ.1,500-க்கு வழங்கப்படுகிறது. தேவைப்படும் விவசாயிகள் தங்களின் ஆதார் எண், ரேஷன் கார்டு நகல், வங்கிக் கணக்கு புத்தக நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை தங்கள் பகுதியை சேர்ந்த உதவி வேளாண்மை அலுவலரிடம் சமர்ப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.

Must Read : மேகங்கள் விளையாடும் வால்பாறை... 3 நாள் டூர் பிளான் - குடும்பத்தோடு என்ஜாய் பண்ணலாம்!

மேலும், ஜிங்க் சல்பேட் உரம் 10 கிலோ சிப்பம் விலை ரூ.660. அதற்கு ரூ.250 மானியம் வழங்கப்படுகிறது. இதனை விவசாயிகள் பயன்படுத்திக் கொண்டு பயன்பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது

First published:

Tags: Agriculture, Farmers, Local News, Theni