காட்டுப் பகுதியில் வீடு ஒதுக்கியதை ரத்து செய்து தேனி தியாகி விசுவநாததாஸ் காலனியில் இடம் வழங்க கோரி,தேனி மாவட்டஆட்சியர் அலுவலகம் முன்பாக மஞ்சம்மாள் என்பவர் தர்ணாவில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது.
தேனி மாவட்டம் தேனி நகரப் பகுதியில் உள்ள அல்லிநகரம் அருகே பொம்மையா கவுண்டன்பட்டி மருத்துவர் தெருவை சேர்ந்தவர் நடராஜன். இவர் மற்றும் அவரின் மனைவி மஞ்சம்மாள். இவர்களுக்கு அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட பொம்மையகவுண்டன்பட்டி 24 ஆவது வார்டில் உள்ள தியாகி விஸ்வநாததாஸ் காலனியில் முடி திருத்திபவர்களுக்கும், சலவை தொழிலாளர்களுக்கும் 1991 மற்றும் 1993 ஆம் ஆண்டு தமிழக அரசு வழங்கிய இலவச வீட்டு மனை திட்டத்தின் கீழ் ஒரு நபருக்கு இரண்டு சென்ட் வீதம் 210 நபருக்கு பட்டா கொடுத்ததாகவும், அதேபோல் தனது கணவர் நடராஜன் முடித்திருக்கும் தொழில் செய்து வந்த நிலையில் 1993 ஆம் ஆண்டு பிளாட் எண் 198 தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையி அதே மனையை மற்றொரு நபருக்கு கொடுத்துள்ளனர் என்றும், அதனைத் தொடர்ந்து மாற்று இடமாக தங்களுக்கு ஒதுக்கிய அதே இடத்தில், கல் கட்டிடம் கட்டி குடிசை வீடு கட்டி வசித்து வந்த நிலையில் தற்பொழுது அந்த இடத்தினை தேனி அல்லிநகரம் நகராட்சி சார்பில் இடித்து பொதுக் கழிப்பறை கட்டப்பட்டுள்ளதாக மஞ்சம்மாள் வேதனை தெரிவித்துள்ளார்.
மேலும் யாரும் குடியிருக்காத பகுதியான வீரப்ப அய்யனார் கோவில் காட்டுப் பகுதியில் தங்களுக்கு அரசு சார்பில் பட்டா வழங்கப்பட்டுள்ளதால்,காட்டுப்பகுதியில் வசிப்பதினால் உடல்நிலை சரியில்லாத மகனை பார்ப்பதற்கு சிரமமாக உள்ளது என்றும் , இதனால் மீண்டும் அதே விசுவாதநாதாஸ் காலணியில் இடம் கொடுத்து உதவி செய்யுமாறும் கேட்டுக்கொண்டார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இதற்கிடையில், இந்த தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களை போலீசார் உடனடியாக அப்புறப்படுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று அவர்கள் மனு அளித்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Theni