முகப்பு /தேனி /

தேனியில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு

தேனியில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு

விளையாட்டு போட்டி

விளையாட்டு போட்டி

Theni District | முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேனி மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Theni, India

முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடத்தப்படுகிறது. பொதுப்பிரிவு, பள்ளி, கல்லூரி, மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள் ஆகிய 5 பிரிவுகளில் ஆண், பெண் இருபாலருக்கும் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

மாவட்ட அளவில் 42 வகையான போட்டிகளும், மண்டல அளவில் 8 வகையான போட்டிகளும் என 50 வகையான போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இந்த போட்டிகளில் கலந்துகொள்ள இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

விண்ணப்பிக்க கடந்த 23ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி 29ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

Must Read : காஞ்சி நகரில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்கள் - ரசித்து சுற்றிப்பார்க்க ஒருநாள் போதாது!

எனவே, இதில் கலந்துகொள்ள விரும்பும் வீரர், வீராங்கனைகள் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Sports, Theni