முகப்பு /தேனி /

பாரம்பரிய உள்ளூர் பயிர் ரகங்களை பிரபலப்படுத்தும் கண்காட்சி.. ஆண்டிபட்டியில் நடைபெற்றது..

பாரம்பரிய உள்ளூர் பயிர் ரகங்களை பிரபலப்படுத்தும் கண்காட்சி.. ஆண்டிபட்டியில் நடைபெற்றது..

X
உள்ளூர்

உள்ளூர் பயிர் ரகங்களை பிரபலப்படுத்தும் கண்காட்சி

Theni News : தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அரசு தென்னை விதை நாற்று பண்ணையில் உயர்தர பாரம்பரிய உள்ளூர் பயிர் ரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கண்காட்சி நடைபெற்றது.  

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Theni, India

ஆண்டிபட்டியில் பாரம்பரிய உள்ளூர் பயிர் ரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கண்காட்சி நடைபெற்றது.

தமிழக அரசு வேளாண்மை உழவர் நலத்துறை, வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை சார்பில் மாநில நிர்வாக திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டம் 2022 -23ன் கீழ் உயர்தர பாரம்பரிய உள்ளூர் பயிர் ரகங்களை பிரபலப்படுத்துதற்கான கண்காட்சி மாவட்டங்கள் தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் கோவில்பட்டி ஊராட்சியில் அரசு தென்னை விதை நாற்று பண்ணையில் இந்நிகழ்ச்சி நடந்தது.

வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் மாநில விரிவாக்க திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்பு - அட்மா திட்டம் கீழ் உயர்தர பாரம்பரிய உள்ளூர் பயிர் ரகங்களை பிரபலப்படுத்து வதற்காக மரபியல் பன்முகத்தன்மை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் விவசாயிகளுடன் கலந்து உரையாடிய தேனி மாவட்ட ஆட்சியர் விவசாயிகளுக்கு நலத்திட்ட உபகரணங்களை வழங்கினார். இதில் ஆண்டிபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

First published:

Tags: Agriculture, Local News, Theni