Home /theni /

பிரத்யேக ஸ்போர்ட்ஸ் இணையதளம் தொடங்கிய ஹாஜி கருத்த ராவுத்தர் ஹௌதியா கல்லூரி.. மாணவர்களுக்கு கிடைக்கும் பலன்கள்...

பிரத்யேக ஸ்போர்ட்ஸ் இணையதளம் தொடங்கிய ஹாஜி கருத்த ராவுத்தர் ஹௌதியா கல்லூரி.. மாணவர்களுக்கு கிடைக்கும் பலன்கள்...

உத்தமபாளையம்

உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரி

Hajee Karutha Rowther Howdia College : தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹௌதியா கல்லூரி நிர்வாகத்தினர் விளையாட்டுத் துறைக்கு என்று புதிய இணையத்தளத்தை  தொடங்கியுள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Theni Allinagaram | Theni
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் கல்லூரியான ஹாஜி கருத்த ராவுத்தர் ஹௌதியா கல்லூரி 1956 ஆம் ஆண்டு ஹாஜி கருத்த ராவுத்தர் முகமது மீரான் அவர்களால் ஏழை மாணவர்கள் பயன்படும் வகையில் துவங்கப்பட்டது. இக்கல்லூரி படிப்படியாக வளர்ச்சி அடைந்து சமீப காலத்தில் தேசிய தர மதிப்பீட்டுக் குழுவினரால் ஏ டபுள் பிளஸ் என்ற அங்கீகாரத்தை பெற்றுள்ளது. இத்தகைய சிறப்பிற்குரிய கல்லூரியின் உடற்கல்வித்துறை சார்பாக வலைதள வெளியீட்டு விழா கடந்த வாரத்தில் கல்லூரியின் உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

வலைதள துவக்க விழா :-

தமிழகத்தில் உள்ள பல கல்லூரிகள் தங்களது கல்லூரியின் பெருமைகளை வெளிக்காட்டும் விதமாக இணையதளங்களை உருவாக்கி செயல்பட்டு வரும் நிலையில்,  முதல் முறையாக  உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விளையாட்டு துறைக்கு என்று பிரத்யேகமாக ஒரு இணையதளத்தை உருவாக்கியுள்ளனர்.

இந்த இணையதளத்தில் தமிழக கல்லூரிகளில் நடைபெறும் பல்வேறு விளையாட்டுகள் மற்றும் போட்டிகள் சம்பந்தமான அனைத்து செய்திகளையும் இந்த இணையதளத்தில் காணலாம். இந்திய அளவில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் பயிலும் மாணவர்கள் போட்டிகளை தெரிந்து கொண்டு தங்களது சுயவிவரத்தை இணையதளத்தில் பதிவு செய்து அதன் மூலம் மற்ற கல்லூரிகளில் நடைபெறும் போட்டிகளில் மாணவர்கள் கலந்துகொண்டு பங்குபெறும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் மாணவர்கள் விளையாட்டு துறையில் சாதித்த புள்ளி விவரங்கள் மற்றும் பதக்கம் பரிசுகள் குறித்த விவரங்கள் இணையத்தளத்தில் பதிவேற்றப்படும் எனவும், இதன் மூலம் மாணவ மாணவர்கள் தங்களது இலக்குகளை அடைய எங்கு சென்றாலும் இந்த இணையதளம் அவர்களுக்கு நிச்சயம் உதவும் என கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் இந்த இணையதளத்தில் பதிவு செய்து விளையாட்டு பற்றிய செய்திகளை தெரிந்து கொள்ளும் அளவிற்கு இணையதளமானது. உருவாக்கப்பட்டுள்ளது என கல்லூரி நிர்வாகத்தினர் கூறினர்.

மாணவர்களை ஊக்குவிக்க உதவும் :-

இந்நிகழ்ச்சியில் இக்கல்லூரியின் செயலர் மற்றும் தாளாளருமான ஹாஜி. எம். தர்வேஷ் முகைதீன் மேலாண்மை குழு தலைவர் ஜனாப். எஸ். செந்தால் மீரான் மற்றும் மேலாண்மை குழு உறுப்பினர்கள் தலைமை தாங்கி இணையதள வெளியீட்டு விழாவை தொடங்கி வைத்தனர். மேலும் கல்லூரியின் 16 க்கும் மேற்பட்ட துறைத் தலைவர்கள் பேராசிரியர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முன்னிலை வகித்த கல்லூரியின் முதல்வர் முகமது மீரான் சிறப்புரை வழங்கினார். இந்த வலைதளமானது ஹாஜி கருத்த ராவுத்தர் ஹௌதியா கல்லூரியின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டினை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது. மேலும் வலைதளத்தில் உள்ள அனைத்து சிறப்புகளையும் மாணவர்களுக்கு எளிமையாக எடுத்துரைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனைத்து துறை தலைவர்களுக்கும் கௌரவம் செய்யப்பட்டதோடு அவர்களால் ஒவ்வொரு வலைதள பக்கங்களையும் திறந்து வைக்கப்பட்டது. மேலும் கல்லூரியின் அனைத்து மாணவ மாணவிகளும் இவ்விழாவில் கலந்துகொண்டனர். இந்த வலைத்தளத்தினை சிறப்பாக மேம்படுத்தியதோடு இவ்விழாவினையும் கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர்  அக்பர் அலி ஏற்பாடு செய்திருந்தார்

புதிதாக தொடங்கப்பட்ட இணையதளம் www.sports.hkrhc.ac.in இந்த இணையதளம் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியரான அக்பர் அலியை 9444280612 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

இந்த கல்லூரியில் விளையாட்டுத்துறையில் சாதிக்கும் மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
Published by:Arun
First published:

Tags: Local News, Theni

அடுத்த செய்தி