ஹோம் /தேனி /

தேனியில் நாளை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் - இளைஞர்களுக்கு கலெக்டர் அழைப்பு

தேனியில் நாளை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் - இளைஞர்களுக்கு கலெக்டர் அழைப்பு

வேலை வாய்ப்பு 

வேலை வாய்ப்பு 

Theni District | தேனியில் நாளை (20-01-2023) தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் இளைஞர்கள் பங்கேற்று பயன்பெற வேண்டும் என மாவட்ட கலெக்டர் முரளிதரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனியில் நாளை (20-01-2023) தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் இளைஞர்கள் பங்கேற்று பயன்பெற வேண்டும் என மாவட்ட கலெக்டர் முரளிதரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

வேலை நாடுநர்கள் பயன்பெறும் வகையில் தேனி மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில், மாவட்ட கலெக்டர் அவர்களின் ஆலோசனையின் பேரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டுவருகிறது.

அதன்படி நாளை தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

முகாமில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களின் நிறுவனங்களுக்கு ஆட்களை தேர்வு செய்கின்றனர். எனவே, 10ஆம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் உள்ள வகுப்புகள் படித்தவர்கள், பிளஸ்-2, ஐ.டி.ஐ., பட்டயப்படிப்பு மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்கள் முகாமில் பங்கேற்கலாம்.

Must Read : பன்றிக் காய்ச்சல் தொற்றிலிருந்து பாதுகாப்பது எப்படி? அரசு மருத்துவர் விளக்கம்

முகாமிற்கு வருபவர்கள் தங்களின் சுயவிவர நகல், கல்விச்சான்றிதழ்களின் நகல்களுடன் பங்கேற்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Employment, Job Fair, Local News, Theni