முகப்பு /தேனி /

‘இனி நாள் முழுவதும் குடிநீர் சப்ளை’ - சின்னமனூர் நகராட்சியில் அம்ரூத் 2.0 திட்டம் அமல்!

‘இனி நாள் முழுவதும் குடிநீர் சப்ளை’ - சின்னமனூர் நகராட்சியில் அம்ரூத் 2.0 திட்டம் அமல்!

X
சின்னமனூர்

சின்னமனூர்

District Theni | தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சியில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா சின்னமனூர் பகுதியில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சியில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா சின்னமனூர் பகுதியில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில், கம்பம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

வளர்ச்சி திட்ட பணிகள்:-

தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சியில் மேற்கொள்ளப்பட உள்ள 3 வளர்ச்சி திட்ட பணிகளுக்கான துவக்க நிகழ்வு மற்றும் அடிக்கல் நாட்டு விழா சின்னமனூர் உழவர் சந்தை அருகில் அமைந்துள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் மார்ச் 13 அன்று நடந்தது..

வளர்ச்சித்திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

24 மணி நேரமும் குடிநீர்:

அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் 2,858 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பொதுமக்களுக்கு 24 மணி நேரமும் குடிநீரை சீராக வழங்குவதற்கான திட்டத்தின் துவக்க விழாவும், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 449 லட்சம் மதிப்பீட்டில் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் தார்சாலை அமைக்கும் பணி.

மேலும் படிக்க : தேனி தப்புகுண்டு கிராமத்தில் 253 ஏக்கர் பரப்பளவில் புதிய கால்நடை மருத்துவமனை திறப்பு..

பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையான எள்ளுக்கட்டை மண் சாலையினை தார் சாலையாக மாற்றி பைபாஸ் உடன் இணைக்கும் பணியின் துவக்க விழாவும், கம்பம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 30 லட்சம் மதிப்பீட்டில் சின்னமனூர் அரசு மருத்துவமனையில் அவசர பிரிவு மையம் கட்டும் பணி மேற்கொள்ள அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது.

கம்பம் எம்.எல்.ஏ அடிக்கல் நாட்டினார்

கம்பம் எம்.எல்.ஏ அடிக்கல் நாட்டினார்:

இந்த நிகழ்ச்சி கம்பம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. மேலும்,இந்த நிகழ்ச்சியில் கம்பம் நகராட்சி நகர மன்ற தலைவர் அய்யம்மாள், நகர்மன்றத் துணைத் தலைவர் முத்துக்குமார், தேனி தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி பஞ்சாப் முத்துக்குமரன், மற்றும் ஏராளமான திமுக உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

First published:

Tags: Local News, Theni