முல்லைப் பெரியாறு அணையை கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுவிக்கை தேனி மாவட்ட மக்கள் உள்பட 5 மாவட்ட மக்களும் மரியாதைக்குரியவராகவே பார்க்கின்றனர். இதனால் ஒவ்வொரு ஆண்டும் பென்னிகுவிக் பிறந்தநாளை முன்னிட்டு ஏராளமான அரசியல் கட்சி தலைவர்களும் விவசாய சங்க தலைவர்களும் பென்னிகுவிக் பிறந்தநாளை முன்னிட்டு சமூகம் சார்ந்த பல்வேறு பணிகளையும் விளையாட்டு போட்டிகளையும் நடத்துவர். அந்த வகையில் தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் ஒருங்கிணைந்த 5 மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாய சங்கம் சார்பாக (ஜனவரி 20) இன்று இரட்டை மாட்டுவண்டி போட்டி நடத்தப்பட்டது.
பென்னிகுவிக்கின் 182வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று காலை 7 மணிக்கு கூடலூர் லோயர் கேம்ப் சாலையில் இரட்டை மாட்டு வண்டி போட்டி நடத்தப்பட்டது. தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நடைபெறும் இந்த மாட்டு வண்டி போட்டியில் தேனி மாவட்டம் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான பகுதிகளில் இருந்து மாட்டு வண்டி உரிமையாளர்கள் கலந்து கொண்டு போட்டியில் பங்கேற்றனர். மாட்டுவண்டி பந்தயம் கூடலூர் லோயர் கேம்ப் சாலையில்ஏழு வகையான மாடுகளுக்கு தனித்தனியாக பந்தயம் நடத்தப்பட்டது.
கூடலூரில் நடைபெற்ற இந்த மாட்டு வண்டி பந்தயத்தில், கூடலூர், கம்பம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் சுமார் 100க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இந்த மாட்டு வண்டி போட்டி ஒருங்கிணைந்த 5 மாவட்ட விவசாய சங்க தலைவர் எஸ்.ஆர்.தேவர் தலைமையில் நடைபெற்றது. இந்த மாட்டு வண்டி பந்தையம், நடுமாடு, தேன்சிட்டு, பூஞ்சிட்டு, தட்டான் சிட்டு , கரிச்சான்மாடு, புள்ளிமான், இளம் ஜோடி என 7 வகையான பிரிவுகளில் நடத்தப்பட்டன. இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கு ரொக்க பரிசு வழங்கப்பட்டது.
இதில் நாட்டுமாடு வகை பிரிவில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு முதல் பரிசாக 40,001 ரூபாயும், இரண்டாம் பரிசாக 30,001 ரூபாயும் மூன்றாம் பரிசாக 25,001 ரூபாயும் வழங்கப்பட்டது. இதில் கரிச்சான் மாடு வகை பிரிவில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு முதல் பரிசாக 30,001 ரூபாயும், இரண்டாம் பரிசாக 25001 ரூபாயும் மூன்றாம் பரிசாக 20,001 ரூபாயும் வழங்கப்பட்டது. மேலும், பூஞ்சிட்டு மாடு வகை பிரிவில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு முதல் பரிசாக 25,000 ரூபாயும், இரண்டாம் பரிசாக 20,000 ரூபாயும் மூன்றாம் பரிசாக 15,000 ரூபாயும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.
தொடர்ந்து தேன்சிட்டு மாடு வகை பிரிவில் கலந்துகொண்டு வெற்றி பெறும் மாட்டின் உரிமையாளர்களுக்கு முதல் பரிசாக 15,000 ரூபாயும், இரண்டாம் பரிசாக 10,000 ரூபாயும் மூன்றாம் பரிசாக 8,000 ரூபாயும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. தட்டான் சிட்டு வகை பிரிவில் கலந்துகொண்டு வெற்றி பெறும் மாட்டின் உரிமையாளர்களுக்கு முதல் பரிசாக 10000 ரூபாயும், இரண்டாம் பரிசாக 8,000 ரூபாயும், மூன்றாம் பரிசாக 7,000 ரூபாயும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.
புள்ளிமான் வகை பிரிவில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு முதல் பரிசாக 8000 ரூபாயும், இரண்டாம் பரிசாக 7,000 ரூபாயும், மூன்றாம் பரிசாக 6,000 ரூபாயும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. இளம்ஜோடி வகை பிரிவில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு முதல் பரிசாக 7,000 ரூபாயும், இரண்டாம் பரிசாக 6,000 ரூபாயும் மூன்றாம் பரிசாக 5,000 ரூபாயும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
அதேபோல் மாட்டு வண்டி போட்டியில் பங்குபெற்று வெற்றிபெற்ற நபர்களுக்கு கம்பம் மற்றும் கூடலூர் பகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பரிசு தொகை வழங்கினர். கூடலூர் லோயர் கேம்ப் சாலையில் சீறி பாய்ந்த மாட்டுவண்டி பந்தயத்தை காண ஏராளமான பொதுமக்கள் மற்றும் பார்வையாளர்கள் குவிந்தனர். இந்த மாட்டு வண்டி பந்தயமானது பொதுமக்களின் ஆரவாரத்துடனும் போலீசாரின் பாதுகாப்புடனும் நடைபெற்றது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Theni