முகப்பு /தேனி /

உத்தமபாளையத்தில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம்..! முதல் 3 இடங்களுக்கு இவ்வளவு பரிசா..!

உத்தமபாளையத்தில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம்..! முதல் 3 இடங்களுக்கு இவ்வளவு பரிசா..!

X
உத்தமபாளையத்தில்

உத்தமபாளையத்தில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம்

Double Bullock Cart Competition in Utthampalayam | உத்தமபாளையம் அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டியில் மந்தை அம்மன் கோயில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி அனுமந்தன்பட்டியில் கொண்டாடப்படும் புகழ்பெற்ற திருவிழாவான மந்தையம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு இந்த ஆண்டு இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை நடைபெற்றது.

அனுமந்தன்பட்டி - சின்னமனூர் பைபாஸ் சாலையில் நடைபெற்ற இப்போட்டியில் பூஞ்சிட்டு, தேன்சிட்டு, கரிச்சான் சிட்டு, நடுமாடு என ஐந்து பிரிவுகளாக நடைபெற்றது. இந்த மாட்டு வண்டி போட்டியில் மதுரை, தேனி, திண்டுக்கல் விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள் கலந்துகொண்டன.

உத்தமபாளையத்தில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம்

முதல் 3 இடங்களைப் பிடித்த மாட்டு வண்டி வீரர்களுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை ரொக்க பரிசு மற்றும் கேடயம் பரிசாக வழங்கப்பட உள்ளது. மேலும் சாலையின் இருபுறமும் கூடியிருந்த ஏராளமான பொதுமக்கள் ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தி மாட்டுவண்டி போட்டியை கண்டுகளித்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos
    First published:

    Tags: Local News, Theni