முகப்பு /தேனி /

தேனி புத்தக திருவிழாவில் பார்வையாளர்களை கவர்ந்த நாய்கள் கண்காட்சி..

தேனி புத்தக திருவிழாவில் பார்வையாளர்களை கவர்ந்த நாய்கள் கண்காட்சி..

X
பார்வையாளர்களை

பார்வையாளர்களை கவர்ந்த நாய்கள் கண்காட்சி

Theni Book Fair 2023 | தேனி அருகே பழனிசெட்டிப்பட்டியில் உள்ள மேனகா மில் மைதானத்தில் தேனி மாவட்டத்தின் சார்பாக முதல் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கால்நடைத்துறை சார்பாக நாட்டு நாய்கள் சங்கம நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Theni, India

தேனி புத்தக திருவிழாவில் தேனி மாவட்ட கால்நடை மற்றும் பராமரிப்பு துறை சார்பில் பாரம்பரியமிக்க நாட்டு நாய்களின் சங்கமம் நிகழ்ச்சியும், போலீஸ் நாய்களின் சாகச நிகழ்ச்சியும் நடந்தது. இதனை ஏராளமான பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.

புத்தக கண்காட்சி :

தேனி அருகே பழனிசெட்டிப்பட்டியில் உள்ள மேனகா மில் மைதானத்தில் தேனி மாவட்டத்தின் சார்பாக முதல் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கால்நடைத்துறை சார்பாக நாட்டு நாய்கள் சங்கம நிகழ்ச்சி நடைபெற்றது. கால்நடைத்துறையின் மண்டல இணை இயக்குனர் சுப்பையா பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த நாய்கள் சங்கமத்தில் சிப்பிப்பாறை, கோம்பை, கண்ணி உள்ளிட்ட 35க்கும் மேற்பட்ட பல்வேறு விதமான நாய்கள் பங்கேற்றன.

இந்நிகழ்ச்சியில் இணை இயக்குனர் கணபதி மாறன், சிறப்பு கால்நடை மருத்துவர் அன்பழகன், உதவி இயக்குனர் சுப்பிரமணி மற்றும் கால்நடைத்துறையை சேர்ந்த அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். மேலும் பாரம்பரிய நாய்களின் உரிமையாளர்களுக்கு சான்றிதழ்களும், நாய்களுக்கு தேவையான உணவு பொருட்களும் வழங்கப்பட்டன.

இதையும் படிங்க : மதுரை, திருச்சி வழியாக கூடுதல் வாராந்திர சிறப்பு ரயில்.. தெற்கு ரயில்வே அறிவிப்பால் பயணிகள் மகிழ்ச்சி!

வியக்க வைத்த மோப்ப நாய்கள் :

இதனைத்தொடர்ந்து போலீஸ் மோப்ப நாய்களின் துப்பறியும் திறன் குறித்த ஒத்திகையும் நடந்தது. அப்போது, மறைத்து வைக்கப்பட்ட கஞ்சா போதைப் பொருள், வெடிமருந்து கண்டுபிடித்தல், கொலை குற்றவாளிகளை கண்டுபிடித்தல் உள்ளிட்ட ஒத்திகைகள் நடந்தன. போலீஸ் மோப்ப நாய்களின் துப்பறியும் திறனை, திரளான பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.

First published:

Tags: Local News, Theni