முகப்பு /தேனி /

தேனியில் ஆணழகன் போட்டி.. மிஸ்டர் தமிழ்நாடு பட்டத்தை வென்றது யார் தெரியுமா?

தேனியில் ஆணழகன் போட்டி.. மிஸ்டர் தமிழ்நாடு பட்டத்தை வென்றது யார் தெரியுமா?

X
தேனியில்

தேனியில் நடைபெற்ற ஆணழகன் போட்டி

Mr Tamilnadu : தேனியில் இந்திய பயிற்சி கழகம் மற்றும் சிறகுகள் உடற்பயிற்சி கூடம் சார்பில் மாநில அளவிலான மிஸ்டர் தமிழ்நாடுக்கான ஆணழகன் போட்டி நடைபெற்றது.

  • Last Updated :
  • Theni, India

தேனி தனியார் திருமண மண்டபத்தில் இந்திய பயிற்சி கழகம் மற்றும் சிறகுகள் உடற்பயிற்சி கூடம் சார்பில் மாநில அளவிலான மிஸ்டர் தமிழ்நாடு மற்றும் மிஸ்டர் தேனிக்கான ஆணழகன் போட்டி நடைபெற்றது. இதில் தேனி, மதுரை, திருச்சி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 27 மாவட்டங்களை சேர்ந்த 500 போட்டியாளர்கள் கலந்துகொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

தேனியில் ஆணழகன் போட்டி

50 கிலோ முதல் 75 கிலோ வரையிலான எடை பிரிவு என தனித்தனியே போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் மிஸ்டர் தமிழ்நாடுக்கான ஆணழகன் பட்டத்தை ஓசூர் மாவட்டத்தை சேர்ந்த கண்ணன் தட்டிச் சென்றார். அவருக்கு ரூ.15000 மதிப்புள்ள குளிர்சாதன பெட்டி வழங்கப்பட்டது.

மேலும் மிஸ்டர் தேனிக்கான ஆணழகன் பட்டத்தை சின்னமனூர் சேர்ந்த ஈஸ்வரன் ஆகியோர் தட்டிச் சென்றனர். அவருக்கு கோப்பை மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. மேலும் ஆணழகன் போட்டியில் பங்கேற்று 2ம் மற்றும் 3ம் இடத்தை பிடித்த போட்டியாளர்களுக்கு சான்றிதழ்களும், கோப்பைகளும் வழங்கப்பட்டன.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Theni