முகப்பு /தேனி /

தேனி மாவட்டத்தில் நாளை எங்கெல்லாம் மின்தடை தெரியுமா?

தேனி மாவட்டத்தில் நாளை எங்கெல்லாம் மின்தடை தெரியுமா?

மின் தடை 

மின் தடை 

Theni district | தேனி மாவட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (சனிக்கிழமை) மின் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம், உத்தமபாளையம் துணைமின் நிலையம் உள்ளட்ட சில பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (18-02-2023) இந்த பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும் எனறு மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மின் தடை பகுதிகள்:

தேனி அருகே உள்ள வடவீரநாயக்கன்பட்டி துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், புதிய பஸ் நிலையம், தொழிற்பேட்டை, சிவாஜி நகர், அரப்படித்தேவன்பட்டி, வடபுதுப்பட்டி, பாரஸ்ட் ரோடு ஆகிய இடங்களில் மின் தடை செய்யப்படுகிறது.

Must Read : கண்களுக்கு விருந்து படைக்கும் கம்பம் பள்ளத்தாக்கு - திராட்சை தோட்டங்களும், பசுமையும் ஆளையே மயக்கும்!

இதேபோல உத்தமபாளையம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட உத்தமபாளையம், கோம்பை, அனுமந்தன்பட்டி, பண்ணைப்புரம், ராயப்பன்பட்டி, கோகிலாபுரம், ஆணைமலையன்பட்டி, அணைப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை மின் வினியோகம் இருக்காது.

First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Theni