முகப்பு /தேனி /

அரிசிக்கொம்பன் காட்டுயானை இங்கு விடப்படுகிறதா? மீண்டும் கலக்கத்தில் மக்கள்..

அரிசிக்கொம்பன் காட்டுயானை இங்கு விடப்படுகிறதா? மீண்டும் கலக்கத்தில் மக்கள்..

X
அரிசிக்கொம்பன்

அரிசிக்கொம்பன் காட்டுயானை

Arisi Komban : கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் சுற்றி வந்த அரிசிக்கொம்பன் யானையை உச்சகட்ட பாதுகாப்பில் பிரத்யேக வாகனத்தில் வேறு இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் கம்பம் நகர் பகுதிக்குள் உலா வந்த அரிசிக்கொம்பன் யானையை பிடிக்க கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக வனத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், இன்று அரிசிக்கொம்பன் யானை சின்ன ஓவுலாபுரம் அருகே உள்ள பெருமாள் கோயில் மலைப்பகுதியில் உலா வந்ததை கண்காணித்து வந்த வனத்துறையினர் யானையை பிடிக்க ஆயத்தமாகினர். இதனையடுத்து யானையை மயக்க ஊசி செலுத்த ஏதுவான இடம் அமைந்ததால் கம்பம் வனத்துறை அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கும்கி யானைகளை சின்ன ஓவுலாபுரம் பகுதிக்கு வரவழைத்து கும்கி யானைகள் உதவியுடன் அரிசிக்கொம்பனை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

பின்னர் பிடிக்கப்பட்ட அரிசிக்கொம்பனை வனத்துறையினர் பிரத்யேக வாகனத்தில் ஏற்றி பலத்த பாதுகாப்புடன் தேனி நகர் பகுதியை கடந்து அழைத்துச் சென்றனர். அரிசிக்கொம்பன் யானையை வாகனத்தில் அழைத்துச் செல்லும் தகவலை அறிந்து ஏராளமான பொதுமக்கள் வழிநெடுகிலும் நின்று தங்களது கைபேசியில் புகைப்படம் எடுத்து வருகின்றனர்.

அரிசிக்கொம்பன் காட்டுயானை

மேலும் பிடிக்கப்பட்ட அரிசிக்கொம்பன் யானையை ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை வனக்கோட்டத்திற்கு உட்பட்ட வெள்ளிமலை பகுதிகளில் விடப்படலாம் என்று கூறப்பட்டு வருகிறது. ஆனால் அரிசிக்கொம்பன் யானை எந்த பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது என்று வனத்துறை சார்பில் இன்னும் முழுமையான தகவல்கள் தெரிவிக்கப்படாமலே இருக்கிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் யானையின் துதிக்கையில் காயம் ஏற்பட்டுள்ளதால் அதற்கு சிகிச்சை அளித்த பின்பு வனப்பகுதிக்குள் விட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

First published:

Tags: Local News, Theni