Home /theni /

முல்லை பெரியாற்றில் நீர் திறப்பு குறைப்பு காரணம் என்ன தெரியுமா? 

முல்லை பெரியாற்றில் நீர் திறப்பு குறைப்பு காரணம் என்ன தெரியுமா? 

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

Theni | முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India
    தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களில் மழை பெய்து வருகிறது. அதேபோல தமிழகத்திலும் பல இடங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ள பெருக்கும் ஏற்பட்டுள்ளது.

    அணைகள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிறைந்து காணப்படுகிறது. இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதகளில் அருவிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள அணைகளிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிகப்படியான உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அனைத்து அணைகளும் நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

    வைகையாறு, முல்லைப்பெரியாறு, கொட்டக்குடியாறு, வராகநதி உள்பட அனைத்து ஆறுகளிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. கேரளாவிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து 1,712 கன அடியாக உள்ளது.

    அணையின் நீர்மட்டம் 136.55 அடியாக உள்ளது. பரவலாக மழை பெய்து வருவதால் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. நேற்று 1,866 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை 1,200 கன அடி நீர்மட்டுமே திறக்கப்படுகிறது.

    வைகை அணையின் நீர்மட்டம் 70.01 அடியாக உள்ளது. 2,992 கன அடி நீர் வருகிறது. 2,685 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 376கன அடி நீர் உபரியாக திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.73 அடியாக உள்ளது. 49 கன அடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. பெரியாறு 8.2, தேக்கடி 8.6, கூடலூர் 3.2, உத்தமபாளையம் 4.3, வீரபாண்டி 3.4, ஆண்டிபட்டி 8, அரண்மனைபுதூர் 2.2, போடி 1.4, பெரியகுளம் 21, மஞ்சளாறு 31, சோத்துப்பாறை 14 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    தமிழகத்தின் தேனி மாவட்ட பகுதிகளிலும் மழை அதிகமாக இருப்பதால் முல்லை பெரியாற்றில் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Theni

    அடுத்த செய்தி