முகப்பு /தேனி /

தேனி மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கோடை மழை : எந்த ஊரில் எவ்வளவு தெரியுமா?- முழு விபரம் இதோ!

தேனி மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கோடை மழை : எந்த ஊரில் எவ்வளவு தெரியுமா?- முழு விபரம் இதோ!

X
தேனி

தேனி மழை

தேனி மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையில், தேனி மாவட்டத்தில் எவ்வளவு மழைப்பொழிவு பதிவாகியுள்ளது என்பது குறித்த விவரம் வெளியாகி உள்ளது.  

  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையில், தேனி மாவட்டத்தில் எவ்வளவு மழைப்பொழிவு பதிவாகியுள்ளது என்பது குறித்த விவரம் வெளியாகி உள்ளது.

தென் மாவட்டங்களில் காற்றழுத்த மாறுபாடு காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாகவும் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்து இருந்தது. அதன்படி தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக வெவ்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வந்தது.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியின் அடிவாரப் பகுதிகளிலும், கூடலூர், தேனி, பெரியகுளம் மற்றும் கம்பம் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்தது. இதனால் கடுமையாக நிலவி வந்த வெப்பம் தணிந்து உள்ளது. இந்த மழையால் நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதன்படி மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு குறித்த விவரம் வெளியாகி உள்ளது.

பதிவான மழைளவு

அதன்படி ஆண்டிபட்டியில் 28.1 மில்லி மீட்டர் மழையும், பெரியகுளத்தில் 75 மில்லிமீட்டர் மழை அளவும், அரண்மனை புதூர் பகுதியில் 37.8 மில்லி மீட்டர் மழையும், வீரபாண்டி பகுதியில் 30.4 மில்லி மீட்டர் மழையும் அதிகபட்சமாக பதிவாகியது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அதேபோல போடி நாயக்கனூர் பகுதியில் 14.2 மில்லி மீட்டர் மழையும், கூடலூரில் 14.2 மில்லி மீட்டர் மழையும், உத்தமபாளையம் பகுதியில் 16.6 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகியுள்ளது.

மஞ்சளாறு அணை பகுதியில் 2 மில்லி மீட்டர் மழையும், பெரியாறு அணை பகுதியில் 8.4 மில்லிமீட்டர் மழை அளவும்,  சோத்துப்பாறையில் 12 மில்லிமீட்டர் மழை அளவும், வைகை அணை பகுதியில் 2 மில்லி மீட்டர் மழை அளவும், தேக்கடி பகுதியில் 6.4 மில்லி மீட்டர் மழை அளவும், சண்முக நதி அணை பகுதியில் 22.4 மழை அளவும் பதிவாகி உள்ளது.

தேனி மாவட்டத்தில் அவ்வப்போது பெய்து வரும் கோடை மழை காரணமாக வெப்பம் தணிந்து குளுமையான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

First published:

Tags: Local News, Theni